கர்த்தர் வெறுக்கும் காரியங்கள்

நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள். ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (சகரி 8:16&17). ஆண்டவரும், இரட்சகருமாகிய  இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நாம் ஆராதிக்கின்ற எங்களுடைய பரலோக தகப்பன் பரிசுத்தர், அவருடைய வாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மையானவைகள், ஆகவே அவருடைய கரத்தின் கிரியைகளான அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போல் பரிசுத்தராய் இருக்க வேண்டும் (1பேது 1:15&16) என்று அவர் விரும்புகிறார். அதனால் அவர் சொல்லுகிறார் ‘ நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள். ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள்’. என்று. அல்லேலூயா ! தேவனுடைய வாயின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையாய் இருக்கின்றதோ, அதே போல் அவருடைய பிள்ளைகளாகிய நாமும் உண்மையை பேச வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். அவர் சத்தியத்தின் தேவனாகவும், சமாதானத்தின் பிரபுவாகவும் இருந்து ஜனங்களை நியாயந்தீர்ப்பது போல்  அவருடைய பிள்ளைகளாகிய நாமும் சத்தியத்துக்கும், சாமாதானத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எங்கள் வாசல்களில்  நியாயந்தீர்க்கிற நியாயாதிபதிகளாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். அல்லேலூயா ! மற்றும் அவருடைய கரத்தின் கிரியைகளான நாங்கள் பிறனுக்கு விரோதமாக நம் இருதயத்தில் எந்த தீங்கும் நினையாமல் இருப்பதோடு தேவன் விரும்புகிற பிரகாரம் பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருக்க வேண்டும். அல்லேலூயா ! பிரியமானவர்களே, நீதிமொழிகள் 6 ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம் ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள், அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங்கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே. ஆகவே பிரியமானவர்களே, உங்களை நீங்களே ஆராய்ந்து பார்த்து, உங்களுடைய எண்ணங்கள், சிந்தைகள், செயல்களை பரிசுத்தப்படுத்தி தேவனுடைய வருகைக்கு உங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?