ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்

ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார் (புல 3:31). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் பாபிலோன் தேசத்தில் சிறைக் கைதிகளாக எடுத்துச் செல்ப் பட்டு அங்கே சிறைக் கைதிகளாக இருந்த போது அவர்கள் பலதரப்பட்ட பிரச்னைகளுக்கூடாக, நெருக்கங்களுக்கூடாக, பாடுகளுக்கூடாக சென்று கொண்டிருந்த போது அவர்கள் ஆண்டவர் தங்களைக் கை விட்டு விட்டார் என்று நினைத்தார்கள், ஆனால் உண்மை அதுவல்ல பிரியமானவர்களே, ஆண்டவர் ஒரு போதும் தன்னுடைய பிள்ளைகளைக் கை விடுவதில்லை, யூதா செய்த பாவத்தின் நிமித்தம் தேவன் அவர்களை அந்நியர்களின் கைக்கு ஒப்புக் கொடுத்திருந்ததோடு, அந்த காலப் பகுதியில் தேவன் அவர்களுக்கு தன்னுடைய முகத்தையும் மறைந்திருந்தார், ஆனால் அது தட்க்காலிகமே, வேதம் சொல்லுகிறது ‘அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை’ (சங் 30:5) என்று. பிரியமானவர்களே, நீங்களும் உங்களுடைய சூழ்நிலை இறுக்கமாக இருக்கிறதினால் நீங்களும் யூதாவைப் போல் ஆண்டவர் உங்களை கை விட்டு விட்டார் என்று நினைக்கிறீங்களா? உண்மை அதுவல்ல பிரியமானவேகளே, ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார் அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை. அல்லேலூயா ! தேவனை தொடர்ந்து விசுவாசியுங்கள், அவர் உங்களை உங்களுடைய சூழ்நிலையில் இருந்து விடுதலை செய்ய உண்மையுள்ளவராக இருக்கிறார். அவர் ஒரு போதும் உங்களை கை விட  மாட்டார், அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?