கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும் (புல 5:1). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் பாபிலோனிய மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோனில் சிறைக்கைதிகளாக இருக்கிறார்கள். அங்கே அவர்கள் அநேக பாடுகளுக்கூடாகவும், வேதனைகளுக்கூடாகவும் கடந்து செல்ல வேண்டியிருந்தது, அவர்கள் இருந்த சூழ்நிலையை வார்த்தையினால் விபரிக்க முடியாது, அந்த அளவு துக்கங்களும், கண்ணீரும் அவர்களுடைய வாழ்க்கையை நிரப்பி இருந்தது, சிலர் தங்களுடைய தாய், தகப்பனை, இழந்து, அவர்களை விட்டுப் பிரிந்து, இன்னும் சிலர் தங்களுடைய மனைவி மற்றும் கணவனை இழந்த நிலையில், தங்களுடைய பிள்ளைகளை இழந்த நிலையில் , உறவினர்களை, நண்பர்பர்களை, தங்களுடைய உடமைகளை, வீடுகளை இழந்த நிலையில் வாழ்க்கையில் பாடுகளையும், நிந்தைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள், அவர்களுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், வேதையினாலும், கண்ணீராலும் நிறைத்திருந்தத