சோதனைகள் பொறுமையை உண்டாக்கும் என்று அறிந்து அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (UK Lockdown - Day 93)

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (யாக் 1:2-3 )

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, வாழ்க்கையில் சோதனைகள் வரும் போது அமைதியாக இருக்க வேண்டும் என்று உலகப் பிரகாரமான தத்துவ ஞானிகள் ஆலோசனைகள் சொல்லுகிறார்கள், ஆனால் இந்த நிரூபத்தை எழுதிய யாக்கோபோ “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என்று தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு ஆலோசனை கொடுக்கின்றார். அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் வாழ்க்கையில் சோதிக்கப்படும் போது, ஏன் எனக்கு மட்டும் வாழ்க்கையில் இந்த சோதனை என்று சலித்து சோர்ந்து போய் கர்த்தரை பற்றும் விசுவாசத்திலிருந்து விலகிப் போய் விடாமல், உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உங்களுக்கு உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?