விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் (UK Lockdown - Day 77)

விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் (சங் 57:1 b)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தாவீது இந்த சங்கீதத்தை சவுலுக்கும், அவருடைய மனிதர்களுக்கும் பயந்து எருசலேமை விட்டு ஓடி கெபியிலே ஒளிந்து இருக்கும் போது பாடியிருக்கிறார். அவர் கெபியிலே இருந்ததினால் தான் பாதுகாப்பாக இருக்கிறேன், எதிரிகளினால் தன்னை பிடிக்க முடியாது என்று நினைக்கவில்லை, அவர் கெபியிலே ஒளிந்து இருந்தாலும் அவருக்கு தெரியும் கர்த்தரினால் மாத்திரம் தான் தன்னை எதிரிகளிடமிருந்து பாதுக்காக்க முடியும் என்று விசுவாசித்தார். அதனால் தான் அவர் தான் எதிரிகளினால் நெருக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போது அவர் சொன்னார் “விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” என்று. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, தாவீது அன்று ஆபத்துக்கு பயந்து கெபிக்குள்ளே இருந்தது போல் இன்று நாமும் விரும்பியோ விரும்பாமலோ வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடக்கிறோம், அன்று தாவீது கெபிக்குள்ளே இருந்தாலும் அவர் விசுவாசித்தார் கோழி தன்னுடைய குஞ்சுகளை தன்னுடைய செட்டைகளின் நிழலிலே வைத்து பாதுகாக்கின்றது போல் கர்த்தரே தன்னை தன்னுடைய செட்டைகளின் நிழலிலே வைத்து பாதுகாக்கிறார் என்று. அல்லேலூயா ! அதே போல் நாமும் கர்த்தரே நம்மை தன்னுடைய செட்டைகளின் நிழலிலே வைத்து பாதுகாக்கிறார் என்று விசுவாசிக்கும் போது கர்த்தர் எங்களை கொரோனா கொள்ளை கிருமிக்கும், மற்றும் எல்லா ஆபத்துக்கும் விலக்கிப் பாதுகாக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா!

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?