தேவனை நூறு சத வீதம் வாழ்க்கையில் நம்புங்கள் (UK Lockdown - Day 87)

ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால் (சங் 78 : 21)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய அவிசுவாசமான நடத்தையினால் தேவனைக் கோபப்படுத்தினார்கள், அவர்கள் தேவனுடைய கிரியைகளைக் குறித்து நம்பவில்லை, தேவன் அவர்களை எதிரிகளிடமிருந்து இரட்சிப்பார் (பாதுகாப்பார்) தங்களுடைய எதிரான சூழ்நிலைகளை மாற்றி போடுவார் என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை. 

பிரியமானவர்களே, நாங்களும் இஸ்ரவேல் ஜனங்கள் போல் தேவனை கோபப்படுத்தாமல் , அவரை நூறு சதவீதம் வாழ்க்கையில் நம்ப வேண்டும், வேதம் சொல்லுகிறது “ விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (ஏபி 11:6) 

பிரியமானவர்களே, தேவனை நம்புங்கள், அவர் உங்களுக்கு விரோதமாக இருக்கும் உங்களுடைய சூழ்நிலையை மாற்றி வாழ்க்கையில் ஜெயத்தைக் கொடுக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்