கர்த்தாவே, உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவேன் (UK Lockdown - Day 73)

எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம் (ஏசா 26:13)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, கர்த்தரை விட்டு விலகி அந்நிய தேவர்களை சேவித்து தேவனுக்கு விரோதமாக பாவம் செய்த இஸ்ரவேல் ஜனங்கள் இப்பொழுது அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக தாங்கள் செய்த பாவங்களுக்காக கர்த்தரிடம் “எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்” என்று பாவ அறிக்கை செய்தார்கள். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, நாமும் நம்முடைய இருதயத்தை கர்த்தருடைய சமூகத்தில் ஆராய்ந்து பார்த்து நம்முடைய இருதயமும் கர்த்தரை விட்டு தூர விலகியிருக்குமானால் “இனி உம்மை மாத்திரமே சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவேன்” என்று ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொண்டு கர்த்தருக்குப் பிரியமானவற்றை மாத்திரம் நம்முடைய வாழ்க்கையில் செய்து கர்த்தருடைய நாமத்தை நம்முடைய வாழ்க்கையில் மகிமைப்படுத்துவோம். அல்லேலூயா ! 

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments