யார் பாக்கியவான்கள் ? (UK Lockdown - Day 85)
உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள் (சங் 84:5)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, தாவீது ராஜா தான் வாழ்க்கையில் எதிரிகளினால் நெருக்கப்படட போது அவர் இந்த 84 வது சங்கீதத்தைப் பாடியிருக்கிறார். அவர் சொல்லுகிறார் “உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்“ என்று. அல்லேலூயா !
ஆம் பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தின் படி கர்த்தரிடத்தில் பெலன்கொள்ளுகிற மனுஷர்களும், தங்கள் இருதயங்களில் கர்த்தருடைய வழிகளைக் கொண்டிருக்கிற மனுஷர்களும் பாக்கியங்கள் என்று வேதம் சொல்லுகின்றது, அல்லேலூயா !
பிரியமானவர்களே, தாவீது ராஜா தன்னுடைய மாமிச பெலத்தில், தன்னுடைய திறமையில் சார்ந்திராமல் கர்த்தரையே தன்னுடைய எல்லாச் சூழ்நிலைகளிலும் சார்ந்து வாழ்ந்தார், அவருக்கு வாழ்க்கையில் கர்த்தரையே பெலனாக இருந்தார், அல்லேலூயா !
அதுமாத்திரமல்ல பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய பிரமானங்களையும், நிகதிகளையும் தன்னுடைய எல்லாச் சூழ்நிலைகளிலும் கைக்கொண்டு வாழ்ந்தார், அதனால் தான் தேவனையே அவரைக் குறித்து “தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்” என்று சாட்சியும் கொடுத்திருந்தார் (அப் 13:22) அல்லேலூயா !
பிரியமானவர்களே, இன்று நாங்களும் தாவீதை போல் எங்களுடைய வாழ்க்கையில் எங்களுடைய திறமையிலோ, அறிவிலோ, மாமிச பெலத்திலோ சார்ந்திராமல் கர்த்தரையே எங்களுடைய எல்லாச் சூழ்நிலைகளிலும் சார்ந்து கர்த்தரையே நம்முடைய பெலனாகக் கொண்டு, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவருடைய வழியில் நாம் நடக்கும் போது நாங்களும் கர்த்தருடைய பார்வையில் பாக்கியவான்கள். அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment