எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக (UK Lockdown - Day 96)

எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக (சங் 90:17)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, கர்த்தருடைய தாசனாகிய மோசே “எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக” என்று மனதுருகி தேவ சமூகத்தில் ஜெபிக்கிறார். 

பிரியமானவர்களே, பிரியம் என்னும் பதத்துக்கு விருப்பம், அன்பு, தயவு, இரக்கம் என்று அநேக அர்த்தங்கள் உண்டு. 

பிரியமானவர்களே, தேவன் தாவீதைக் குறித்து “ ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்” (அப்போ 13:22 ) என்று சாட்சி கொடுத்தார். 

பிரியமானவர்களே, தாவீது வாழ்க்கையில் தேவனுக்கு பிரியமானவற்றை செய்து அவரை  பிரியப்படுத்தினதால் தேவனுடைய பிரியம், தயவு, இரக்கம் தாவீதுக்கு வாழ்க்கையில் கிடைத்தது. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, நாங்களும் மோசேயைப் போல், தாவீதை போல், தானியலைப் போல் தேவனுக்கு பிரியமானவற்றை, விருப்பமானவற்றை செய்து வாழ்க்கையில் அவரை பிரியப்படுத்தி சுத்த இருதயத்தோடு "எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக” என்று ஜெபிக்கும் போது தேவனுடைய பிரியம் எங்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கும், அவருடைய பிரியம் எங்களுக்கு கிடைக்கும் போது நாம் வாழ்க்கையில் எந்தவொரு எதிரிடையான சூழ்நிலையையையும் சந்தித்து வாழ்க்கையில் ஜெயத்தைப் பெற முடியும். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?