உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன் (UK Lockdown - Day 71)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, தாவீது வாழ்க்கையில் பாடுகளுக்கூடாகவும், துன்பங்களுக்கூடாகவும், உபத்திரவங்களுக்கூடாகவும் கடந்து சென்ற போது அவர் கர்த்தருடைய கிருபையின் மீதே நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் தான் அவர் சொல்லுகிறார் “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்” என்று. அல்லேலூயா !
ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய கிருபையும், இரக்கங்களுமே எங்களை இந்த பூலோகத்தில் வாழ வைக்கின்றது, அவருடைய கிருபையும், இரக்கங்களுமே எங்களை இந்நாள் வரை கொரோனா கொள்ளை கிருமி, மற்றும் ஒவ்வொரு தீங்குக்கும் விலக்கி பாதுகாத்து இருக்கின்றது. அல்லேலூயா !
பிரியமானவர்களே “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” என்று புலம்பல் 3:22 இல் வாசிக்கின்றோம். அல்லேலூயா !
ஆகவே பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய சமூகத்தில் அமர்ந்திருந்து, அந்நாளில் நமக்கு எதிராக வரும் பொல்லாப்புக்களை மேட்கொள்ள தேவையான கர்த்தருடைய கிருபையையும், அவருடைய இரக்கங்களையும் கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். அல்லேலூயா !
அவருடைய கிருபை எங்களோடு இருக்கும் போது எந்த தீய சக்தியாலும் எங்களை மேட்கொள்ள முடியாது. அல்லேலூயா !
ஆகவே பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய சமூகத்தில் அமர்ந்திருந்து, அந்நாளில் நமக்கு எதிராக வரும் பொல்லாப்புக்களை மேட்கொள்ள தேவையான கர்த்தருடைய கிருபையையும், அவருடைய இரக்கங்களையும் கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். அல்லேலூயா !
Comments
Post a Comment