என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள் (UK Lockdown - Day 99)

ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள் (எரேமி 2:32)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, “ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்“ என்று கர்த்தர் தன்னுடைய மனப் பாரத்தை, தன்னுடைய கவலையை தீர்க்கதரிசி  எரேமியாவின் மூலமாய்  யூதா ஜனங்களுக்கு கூறுகிறார். 

ஆம் பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் கர்த்தரையும், அவர் அவர்களுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளையும், கிரியைகளையும் வாழ்க்கையில் மறந்து ஜீவித்தார்கள். 

பிரியமானவர்களே, யூதா ஜனங்களை போல் நாம் இராமல், எவ்வாறு ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறவாமல் இருக்கிறாளோ அதே போல் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் கர்த்தரை ஒரு போதும் எங்களுடைய வாழ்க்கையில் மறவாமல் இருந்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கனப் பொழுதும் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளுக்காக, அதிசயங்களுக்காக அவரைத் துதித்து ஸ்தோத்தரிப்பதோடு, அவரைக் குறித்தும் அவருடைய கிரியையைகளைக் குறித்தும், அவருடைய மகத்துவங்களைக் குறித்தும் மறவாமல் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு அவரை ஆராதிக்கிற அவருடைய பிள்ளைகளோடும், அவரை குறித்து அறியாதவர்களுடனும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பேச வேண்டும். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?