Behold, God is my salvation, I will trust and not be afraid, For the Lord God JESUS CHRIST is my strength and song, He also has become my salvation (Isaiah 12:2)
godismysalvationministrydailybread.blogspot.com
Let not your heart faint, and be not fearful at the report heard in the land, when a report comes in one year and afterward a report in another year (Jer 51:46)
வேதம் சொல்லுகிறது,பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் ( 1பேதுரு 5:5 ) ஜாதி பெருமை , பணப் பெருமை படிப்பில் பெருமை , அழகில் பெருமை , தாலந்துகளில் பெருமை etc. உங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்களுடைய உள்ளத்தில் பெருமை இருக்கும் என்றால் பெருமையை உள்ளத்தில் இருந்து எடுத்து போடுங்கள்.உங்களிடம் பெருமை இருக்குமானால் உங்களை படைத்த தேவனே உங்களை எதிர்த்து நிட்பார், வேத வசனம் எங்களை எச்சரிக்கிறது ‘அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.ஆகவே கர்த்தருடைய சமுகத்திலே உங்களைத் தாழ்த்தி உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்.அப்போது தேவனுடைய கிருபை உங்களை சூழ்ந்து கொள்ளும்.கர்த்தர் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா
என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி 31 : 14 b ) ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை கர்த்தர் இந்த புதிய வருடத்தில் உங்களுக்கு வாக்குத் தத்தமாகக் கொடுக்கின்றார். கர்த்தர் சொல்லுகிறார் `என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் ‘ என்று . அல்லேலூயா ! கர்த்தருடைய வார்த்தையை அப்படியே நீங்கள் விசுவாசித்து, அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்துக்காகக் கர்த்தருக்கு ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்துங்கள். நிச்சயமாக கர்த்தருடைய நன்மையான கரம் உங்கள் வாழ்க்கையில் அமர்ந்து இருப்பதையும், அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதையும் நீங்கள் காண்பீர்கள். அவர் உங்களுக்கு நன்மையானதை இந்த வருடத்தில் தருவார், அதனால் நீங்கள் திருப்தியாவீர்கள். அல்லேலூயா ! வாக்குக் கொடுத்த அவர் தனது வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவராக இருக்கிறார். இதுவரை காலமாக உங்கள் வாழ்வில் நீங்கள் காத்திருந்த ...
எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் ( பிலி 4 : 7 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே ! தேவனுடைய சமாதானத்தை நம்முடைய சுய புத்தியினால் விபரிக்க முடியாது, அதை விபரிப்பதுக்கு நம்முடைய வார்த்தைகள் போதாது, அது எல்லா புத்திக்கும் மேலானது, அப்படிப்படட சமாதானம் நம்முடைய இருதயங்களையும், நம்முடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக்கொள்ளும்.நம்முடைய இருதயத்தில் தேவ சமாதானம் நிரம்பிருக்கும்.நமக்கு எவ்வளவு துன்பங்கள், கவலைகள் வந்தாலும் தேவ சமாதானம் நிரம்பிருக்கும், நாம் எதட்கும் கவலைப்படமாட்டொம், சமாதானமாய் இருப்போம்.அல்லேலூயா ! இயேசுவினால் மாத்திரம் தான் எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை உங்களுக்கு தர முடியும்.பிரியமானவர்களே ! இயேசுவை உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக்கொண்டு நீங்களும் அவருடைய எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை பெற்று...
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான் (யாக் 1 :12 ).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.பிரியமானவர்களே! மனுஷருக்கெல்லாம் சோதனைகள் வரும், வாழ்க்கையில் சோதனைகள் வரும் போது நாம் சோர்ந்து போகிறோம்.ஆனாலும் சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான்.சோதிக்க படுகிற மனுஷன் பாக்கியவான் அல்ல சோதனையை சகிக்கிற மனுஷனே பாக்கியவான்.சோதனையினால் ஒருவனுடைய வாழ்வு அழிந்து போவதில்லை.சோதனையினால் வேதனை உண்டாகலாம் ஆனாலும் நாம் சோதனையை சகித்து விசுவாசத்தின் பரீட்சையில் தேர்ச்சி பெற வேண்டும்.சோதனையை சகித்து உத்தமனென்று விளங்கினபின்பு அவன் கர்த்தரால் மேன்மை படுத்தபடுவான்.கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஜீவ கிரீடத்தை வாக்கு பண்ணியிருக்கிறார். நீதியாக பாடுகளை அனுபவிக்கிறவர்கள் ஜீவ கிரீடத்தை பெற்றுக்கொள்ளுவார்கள்.துன்மார்க்கமாக ஜீவித்து வேதனையை அனுபவிக...
இயேசு உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் ( 1 பேதுரு 5 :7 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, உங்களை யாருமே விசாரிப்பதில்லை என்று கவலைபடுகிறீங்களா? உங்களை விசாரிக்க தேவன் இயேசு இருக்கிறார், அவர் உங்களை விசாரிக்கிறவர். ஆகவே உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்து விட்டு அவர் உங்களை விசாரிக்கிறவர் என்னும் சிந்தனை உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் பதிந்திருக்க வேண்டும்.அவர் அவரை நம்பின ஜனங்களை கை விடுவதில்லை, அவரே ஒவ்வொருவரையும் ஆதரிப்பவர், விசாரிப்பவர் அவரே ஒவ்வொருவருக்கும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் கொடுக்கிறவர்.ஆகையால் வேத வசனத்துக்கு கீழ் படிந்து உங்கள் கவலைகள், கண்ணீர்களையெல்லாம் தேவன் இயேசு மீது வைத்து விடுங்கள், அவர் உங்களை கை விட்டு விலகி போகிற தேவன் இல்லை, அவர் உங்களை விசாரிப்பார், உங்களுடைய தேவைகளை சந்திப்பார், உங்களுடைய கவலைகளை நீக்குவார், உங்கள் கண்ணீர்களை துடைப்பார்.நீங்க செய்...
ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது (ஆதி 22:14). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.ஒரு நாள் தேவன் ஆபிரகாமிடம் உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு’ (ஆதி 22:2) என்று சொன்னபோது ஆபிரகாம் உடனடியாக தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான் (ஆதி 22 :3) தேவன் அவனுக்கு கூறின இடத்துக்குச் சென்றடைய மூன்று நாட்களாயின, அந்த மூன்று நாட்களில் ஆபிரகாம் தன...
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்(பிலி4:19).வேதவசனம் ஒரு போதும் பொய்யாகாது.தேவன் இயேசு மீது உங்களுடைய நம்பிக்கையை வைக்கும் போது உங்களுடைய குறைவை எல்லாம் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின் படி கிறிஸ்து யேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். உங்களுயை தேவைகளை சந்திக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்.அதனால் ஒன்றையும் குறித்து கவலைபடாதீங்க.இதை நான் அனுபவரீதியாக உணர்ந்து உள்ளேன் , உணர்ந்து கொண்டிருக்கிறேன்.வேத புஸ்தகத்தில் ஒரு சம்பவம் எழுதப்படிருக்கு, இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில் கானாவூரில் நடந்த ஒரு கல்யாணத்துக்கு அவரை அழைத்து இருந்திருந்தார்கள், அங்கே கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு திராச்சைரசம் அருந்த பரிமாறப்பட்ட்து , ஆனால் அவர்கள் எதிர்பார்க்க வில்லை திராச்சைரசத்தில் குறைவு வரும் என்று, இயேசுவும் அங்கே இருந்த படியால் அவருக்கு திராச்சை ரசம் குறைவாக இருப்பதை குறித்து சொன்ன போது இயேசு தண்ணீரை திராச்சை ரசமாக மாற்றி கல்யாண வீட்டில் இருந்த குறைவை நீக்கினார்.அதே போல உங்கள் வாழ்க்கையிலும் ஏதாவது தேவை அல்லது குறைவு இ...
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவே 2: 21). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் தன்னுடைய தீர்க்கதரிசியான யோவேல் மூலம் யூதா தேசத்துக்கு ஒரு வாக்குத்தத்ததை கொடுத்தார் ‘தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்’ என்று. ‘தேசமே பயப்படாதே’ என்பதன் அர்த்தம் ‘யூதா ஜனங்களே பயப்படாதே’ என்பதே. கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளாகிய யூதா ஜனங்களைப் பார்த்துச் சொல்லுகிறார் ‘யூதா ஜனங்களே (தேசமே) பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்’ என்று. இன்று இந்த வாக்குத்தத்தமானது இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக, இரச்சகராக தங்களுடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்ட அவருடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக இருக்கின்றது. அல்லேலூயா ! பிரியமானவர்களே, ஒரு வேளை நீங்கள் செல்லுகின்றதான சூழ்நிலை உங்களுக்க...
கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான் (யாத் 14 :14 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.பிரியமானவர்களே! கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்யும் பொழுது, உங்களுக்கு எதிராக யாரும் எதிர்த்து நிற்க முடியாது.உங்களுக்காக யுத்தம் செய்யும் கர்த்தரை நம்புங்கள்.உங்களுக்கு விரோதமாய் சத்துருக்கள் எழும்பும்போது, பயப்படாதிருங்கள். அவர்களுடைய , கோபம் , எரிச்சல் , பொறாமை உங்களை ஒன்றும் செய்யாது. உங்களை நேசிக்கின்ற ,உங்களை அரவணைக்கின்ற, உங்களைu பாதுகாக்கிற உங்களை சிருஷ்டித்த கர்த்தர் இயேசுவை நோக்கிப் பாருங்கள்.நீங்கள் அவருடைய வார்த்தைக்கு கீழ் படிந்து நீங்கள் அவர் மேல் உங்களுடைய விசுவாசத்தை வைத்து உங்களுடைய கண்ணீர், கவலை, பாரத்தை அவர் மேல் இறக்கி வைத்து விட்டு அமைதியாய் சும்மாய் இருந்தால் போதும். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்து ஜெயத்தை கொடுக்க அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா ! கர்த்தர் இயேச...
அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் (லேவி 19:31). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, அஞ்சனம் பார்க்கிறதும், குறி சொல்லுவதும் தேவனுக்கு விரோதமான காரியங்கள். இவைகள் பிசாசின் கிரியைகள், ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிற தேவனுடைய பிள்ளைகள் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறி சொல்லுகிறவர்களையும் தேடிப் போகக்கூடாது. வேதத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் ...
Comments
Post a Comment