கர்த்தருடைய வல்லமை (UK Lockdown - Day 86)
இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக (சங் 109: 27)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, தாவீது எந்த சூழ்நிலையில் இந்த சங்கீதத்தை எழுதினார் என்று தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் எதோ ஒரு பிரச்சனையில் இருக்கும் போது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கிறார் என்பது அதிக நிச்சயம்.
பிரியமானவர்களே, என்ன ஒரு அழகான ஜெபம் அவர் சொல்லுகிறார் “இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக“ என்று ஜெபிக்கிறார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பாடுகளுக்கூடாய் கடந்து செல்லும் போது ஏறெடுக்க வேண்டிய ஜெபம் இது. அல்லேலூயா!
ஆம் பிரியமானவர்களே, தாவீது நெருக்கத்தில் இருந்த போது அவர் கர்த்தரை நோக்கி இந்த ஜெபத்தை ஏறெடுத்தார், கர்த்தரும் அவருடைய ஜெபத்தைக் கேட்டு அவருக்கு பதில் கொடுத்தார், அப்போது தேச மக்கள் எல்லாரும் “கர்த்தருடைய கரமே” தாவீதை அவருடைய நெருக்கமான சூழ்நிலையிலிருந்து பாதுகாத்து வாழ்க்கையில் அவருக்கு ஜெயத்தைக் கொடுத்தது என்பதை அறிந்தார்கள். அல்லேலூயா !
பிரியமானவர்களே, தாவீதுடைய வாழ்க்கையில் அதிசயத்தை செய்து அவருடைய நாமத்தை மகிமைப்படுத்திய தேவன் நிச்சயமாய் உங்களுடைய வாழ்க்கையிலும் அதிசயத்தை செய்ய அவர் இன்றும் வல்லமையுள்ளவராகவும், உண்மையுள்ளவராகவும் இருக்கிறார். அல்லேலூயா !
கர்த்தராகிய தேவனை விசுவாசியுங்கள் !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment