தாவீதின் வெற்றியின் இரகசியம் (UK Lockdown - Day 91)
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன் (சங் 52 : 8)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள 52 வது சங்கீதத்தை தாவீது எழுதியிருக்கிறார், இந்த வேத வசனத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விருப்புகின்றேன், அவர் சொல்லுகிறார்,
1) நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்
2) தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்
பிரியமானவர்களே, தாவீதை போல் நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போல் இருக்க வேண்டும், இங்கே “தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போல்”என்பது ஒருவன் தேவனுடைய ஆலயத்தில் வேரூன்றி நிட்பதை அல்லது தேவனில் நிலைத்திருப்பதைக் குறிக்கின்றது, அவ்வாறு தேவனுடைய ஆலயத்தில் ஒலிவ மரத்தைப் போல் இருப்போமானால் நம்முடைய வாழ்க்கை தாவீதை போல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும், நம்முடைய வாழ்க்கை கனி கொடுக்கிற வாழ்க்கையாக பிரயோஜனமுள்ளதாக இருக்கும். அல்லேலூயா !
யோவான் 15:5 சொல்லுகிறது, "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று. அல்லேலூயா !
பிரியமானவர்களே, இரண்டாவது தாவீதை போல் நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய கிருபையே என்றென்றைக்கும் நம்பியிருக்க வேண்டும். அல்லேலூயா ! தாவீது தன்னுடைய ஞானத்திலோ, தன்னுடைய பெலத்திலோ, தன்னுடைய படையின் பெலத்திலோ நம்பியிருக்கவில்லை, மாறாக தேவனுடைய கிருபையே என்றென்றைக்கும் நம்பியிருந்தார், தேவனுடைய கிருபை தன்னோடு இருக்கும் பட்ச்சத்தில் வாழ்க்கையில் எப்படிப்பட்டதான நெருக்கமான சூழ்நிலையையும் தான் எதிர்கொண்டு ஜெயத்தைப் பெறலாம் என்று நம்பியிருந்தார். அல்லேலூயா !
தாவீதுக்கு தேவனோடு இருந்த நெருக்கமான உறவும், தேவனுடைய கிருபையுமே தாவீதின் வெற்றிக்கு காரணமாக இருந்தன.
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment