கர்த்தருடைய ஆசிர்வாதம் (UK Lockdown - Day 88)

கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று (ஏசா 58:14)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, கர்த்தர் தன்னுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் இந்த பூலோகத்தில் தன்னுடைய உன்னத ஆசிர்வாதத்தினால் ஆசிர்வதிக்க விரும்புகிறார். அவர் சொல்லுகிறார் “கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்" என்று. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வசனத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விரும்புகின்றேன், 

1. கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்

2. பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்

பிரியமானவர்களே, “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்” இருப்பது என்பது, உங்களுக்கும், கர்த்தருக்கும் இடையே இருக்கும் உறவைக் குறிக்கின்றது,  நீங்கள் கர்த்தரோடு ஐக்கியமாக இருக்கும் போது இந்த பூலோகத்தில் நடக்கும் பயங்கரமான காரியங்களை பார்த்து, உங்களுக்கு எதிராக இருக்கும் சூழ்நிலையைப் பார்த்து நீங்கள் பயப்படாமல் எப்போதும் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய், சந்தோஷமாய், சமாதானமாய் இருப்பீர்கள் என்பதைக் குறிக்கின்றது. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, “பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்“ என்பதன் அர்த்தம் கர்த்தர் இந்த பூலோகத்தில் அவர் உங்களை அவருடைய பரிபூரணத்தினால், உன்னத ஆசிர்வாதத்தினால் ஆசிர்வதித்து உங்களை ஒரு உன்னத, உயர்ந்த ஸ்தானத்தில் சகல ஆசிர்வாதங்களாலும் ஆசிர்வதிப்பதைக் குறிக்கின்றது. அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments