இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா (UK Lockdown - Day 80)


(கர்த்தாவே) இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா (சங் 108:12)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தாவீது ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்த போது கர்த்தர் மீது அவர் வைத்திருந்த விசுவாசத்தினாலே பெலிஸ்தியனான கோலியாத்தை யுத்தத்தில் ஜெயித்தார். 

இப்போது இந்த 108 வது சங்கீதத்தை தாவீது கர்த்தரை நோக்கிப் பாடும் போது, அவர் ஆடு மேய்க்கும் சிறுவனாக அல்ல இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக சிங்காசனத்தில் இருந்தார், அவருக்கு இப்போது உதவியாக (தேசத்தை எதிரிகளிடமிருந்து காக்க) அநேக யுத்த சேனைகள் இருந்தார்கள், ஆனால் தாவீது தனக்கு இருந்த தன்னுடைய யுத்த சேனையில் விசுவாசத்தை வைக்காமல் கர்த்தரிடத்தில் விசுவாசத்தோடு “இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா” என்று பய பக்தியோடு ஜெபித்தார். அல்லேலூயா ! 

ஆம் பிரியமானவர்களே, தாவீது ராஜா நன்கு அறிந்திருந்தார் கர்த்தருடைய உதவியில்லாமல் தன்னுடைய யுத்த சேனையின் பலத்தினால் மாத்திரம் தாங்கள் யுத்தத்தில் ஜெயிக்க முடியாது என்றும், தாங்கள் (இஸ்ரவேல்) யுத்தத்தில் ஜெயிக்க வேண்டுமென்றால் கர்த்தருடைய உதவி அவசியமென்று. அல்லேலூயா ! அதனால் தான் அவர் சொல்லுகிறார் “கர்த்தாவே) இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா” என்று. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, நீங்களும் வாழ்க்கையில் வெற்றிகரமான வாழ்க்கை வாழவேண்டுமென்றால் தாவீதை போல் உங்களுடைய மாமிச பெலத்தில், திறமையில், அறிவில் சார்ந்திராமல், உங்களுடைய எல்லா சூழ்நிலையிலிலும் கர்த்தரை விசுவாசித்து அவரை சார்ந்து வாழுங்கள். கர்த்தர் நிச்சயமாக உங்களுடைய இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு உதவியாக நின்று உங்களுக்கு வாழ்க்கையில் ஜெயத்தைக் கொடுக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?