தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள் (UK Lockdown - Day 97)

தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே (பிர 12:13)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாங்கள் இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நன்கு அறிந்திருக்க வேண்டும் நாங்கள் இந்த பூலோகத்துக்குரியவர்கள் அல்ல, நாங்கள் பரலோகத்துக்குரியவர்கள், நாங்கள் தேவனால் இந்த பூலோகத்திலிருந்து அவருக்காக பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த ஜாதிகள் என்று, அல்லேலூயா ! 

பிரியமானவர்களே,பாபிலோன் தேசத்தில் சிறைக் கைதியாக இருந்த தானியேல் தன்னுடைய வாலிப பருவத்தில் இருந்தே தேவனுக்காக வைராக்கியமாக வாழ்ந்தார், அவர் தன்னுடைய வாழ்க்கையை சூழ்நிலைக்கேட்ப இசைந்து விட்டுக் கொடுக்கவில்லை, எல்லாச் சூழ்நிலையிலிலும் அவர் தேவனுக்குப் பயந்து, தேவனுடைய கற்பனைகளைக் கைக் கொண்டு தேவனுக்காக வைராக்கியமாக வாழ்ந்தார். அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய  நாங்களும் இந்த பிரபஞ்சத்தில் எப்படியும் வாழலாம் என்று நினைத்து நம்முடைய மாமிச இச்சையின் படி வாழாமல், தானியேலைப் போல், ஜோசேப்பைப் போல் எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவனுக்குப் பயந்து, அவர் எங்களுக்குகென்று நியமித்திருக்கிற நியமனங்களுக்கு, கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்வோம் என்று இன்றைக்கு ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொள்ளுவோம், அதுவே நம் எல்லார் மேலும் விழுந்த  கடமையாகவும் இருக்கின்றது. அல்லேலூயா 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 





Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?