இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது (யோபு 36:26) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவன் மகத்துவமுள்ளவர், தேவன் சர்வ வல்லமையுள்ளவர், அவருடைய கிரியைகள் மகத்துவமானவைகளாக இருப்பதோடு, அவருடைய கிரியைகள் ஒவ்வொன்றிலும் ஒழுங்கும், கிரகமும், பரிபூரணமும், அழகும் நிறைந்திருக்கும். அவருடைய கிரியைகளை எந்த மனுஷனானாலும் பரிபூரணமாய் அறிந்து கொள்ள முடியாது, அவருடைய செயல்கள் மனுஷனுடைய அறிவுக்கும், ஞானத்துக்கும் அப்பாட்பட்டவைகளாக இருக்கின்றது. அல்லேலூயா ! பிரியமானவர்களே, அவரைக் குறித்தும், அவருடைய மகத்துவங்களைக் குறித்தும் நாம் நன்கு அறியாததினால் தான் நாம் சில சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் காரியங்கள் நாம் எதிர்பார்க்கும் விதத்தில் நடக்காத பட்ச்சத்தில் தேவனைக் குறை சுமத்திக் கொண்டுஇருக்கின்றோம். பிரியமானவர்களே, இதனால் தான் இன்று அநேகர் கொரோ...