என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள் (ஏசா 26:20). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, ஏசாயா 26 ம் அதிகாரம் துதியின் கீதம் (26 :1-19) என்று அழைக்கப்படுகிறது. பிரியமானவர்களே, அங்கும், இங்கும் வெளியிலே அலைந்து கொண்டிருந்தால், வெளியிலே இருக்கும் ஆபத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் சிக்கிக் கொண்டு விடுவார்கள் என்பதை மனதில் வைத்து அவர்களுடைய பாதுகாப்புக்காக ஏசாயா தீர்க்கதரிசி “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டு கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்” என்று அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கின்றார். பிரியமானவர்களே, வேத வசனம் நமக்கு அழகாய் சொல்லுகிறது “உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்”...