கர்த்தருடைய கிருபை
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா (சங் 117 :2 ) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் நம்மேல் வைத்திருக்கிற கிருபை பெரியதாகவும், அவருடைய உண்மை என்றென்றைக்குமுள்ளதாகவும் இருக்கின்றது. அல்லேலூயா ! ஆகவே பிரியமானவர்களே, சங்கீதக்காரனைப் போல் நாமும் நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரை எப்போதும் அவருடைய கிருபைக்காகவும், அவருடைய இரக்கங்களுக்காகவும், அன்புக்காகவும், அவருடைய தயாவுக்காகவும், அவருடைய உண்மைக்காகவும் துதிக்க வேண்டும், அல்லேலூயா ! பிரியமானவர்களே, அவ்வாறு தேவனை துதிக்கும் போது நம்முடைய வாழ்க்கை தேவனுடைய பிரசன்னத்தினால் நிரம்பியிருக்கும், அவ்வாறு நம்முடைய வாழ்க்கை தேவ பிரசன்னத்தினால் நிரம்பியிருக்கும் போது வாழ்க்கையில் ஆரோக்கியமும், சமாதானமும், நிம்மதியும், சதோஷமும் இருக்கும். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உ...