தேவன் நித்தியமானவர்
பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர் (சங் 90:2)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, மனுஷர்களாகிய நாம் நித்யமானவர்களல்ல, அநித்யமானவர்கள், மனுஷர்களாகிய நமக்கு சரீர மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது, நாங்கள் ஒருநாள் மரிக்க வேண்டியவர்கள்.
ஆனால் பிரியமானவர்களே, ஆம் ஆராதிக்கின்ற, நம் ஒவ்வொருவரையும் சிருஷ்டித்த நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து நித்தியமானவர், அவர் நித்திய காலமாக இருக்கிறவர், அவர் “பர்வதங்கள் தோன்றுமுன்னும், அவர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், அவர் அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறார், அவரே அல்பாவும், ஓமெக்காவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறார். அல்லேலூயா !
ஆகவே பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் நித்தியகாலமாய் அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிற படியால் அவரை நாம் நம்முடைய வாழ்க்கையில் துதிக்க வேண்டும், போற்ற வேண்டும், மகிமைப் படுத்த வேண்டும், உயர்த்த வேண்டும். அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Amen gbu all
ReplyDelete