தேவனுடைய சித்தத்தின் படியாய் ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்கு செவி கொடுக்கும் தேவன்

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (சங் 66:18-20)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, நம்முடைய இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருப்போமானால் ஆண்டவர் நம்முடைய ஜெபத்துக்கு பதில் கொடுக்க மாட்டார். 

பிரியமானவர்களே, இங்கே சங்கீதக்காரன் சொல்லுகிறார் “ மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக”
என்று. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, நாம் தேவனுடைய சமூகத்தில் ஜெபிக்கும் போது நம்முடைய சுய சித்தம் நிறைவேற வேண்டும் என்று நினைத்து, நம்முடைய சுய சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நம்முடைய சித்தத்தின் பிரகாரம் தேவன் நம்முடைய வாழ்க்கையில் கிரியை செய்ய வேண்டும் எண்டு எதிர் பார்ப்பதே அக்கிரம சிந்தை, அப்படிப்பட்ட இருதயமுள்ளவர்களின் ஜெபத்துக்கு கர்த்தர் செவி கொடுக்க மாட்டார். 

வேதம் சொல்லுகிறது "உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது" என்று (ஏசா 59:2).

பிரியமானவர்களே, நம்முடைய சித்தமல்ல, தேவனுடைய சித்தமே நம்முடைய ஜீவியத்தில் நிறை வேற வேண்டும். அப்படிப்பட்ட சிந்தையோடு நாம் தேவனிடத்தில் கேட்க்கும் போது அவர் நம்முடைய ஜெபத்துக்கு செவி கொடுப்பவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, இங்கே சங்கீதக் காரன் தேவனுடைய சமூகத்தில் அவரைத் தாழ்த்தி, தேவனுடைய சித்தம் அவருடைய வாழ்க்கையில் நிறைவேறும் படி வாஞ்சித்து தேவ சித்தத்தின் படியாய் அவருடைய ஜெபத்தை ஏறெடுத்தார், இதனால் தேவன் அவரின் ஜெபத்தைத் தள்ளாமால் அவருடைய ஜெபத்துக்கு செவி கொடுத்தார். அல்லேலூயா ! 

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் (1 யோவா 15:14)

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?