மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் (கலா 6:7)

அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான் (நீதி 22:8 )

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, சிலர் வாழ்க்கையில் அதிக ஐசுவரியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதட்க்காக அநியாயத்தை செய்து அநீதியான முறையில் பணத்தை சம்பாதித்துக் கொள்ளுகிறார்கள், அது கர்த்தருடைய பார்வையில் பாவமானதாக இருக்கின்றது. அப்படி அவர்கள் சம்பாதித்துக் கொள்ளும் ஐசுவரியமானது அவர்களது வாழ்க்கையில் நிலைத்திருக்காது.

பிரியமானவர்களே,  வேதம் சொல்லுகிறது  “மனுஷன் எதை அவனுடைய வாழ்க்கையில் விதைக்கின்றானோ அதையே அறுப்பான்” என்று. அவன் அநியாயத்தை வாழ்க்கையில் விதைத்தால் வருத்தத்தையே அறுப்பான். 

ஆகவே பிரியமானவர்களே, வாழ்க்கையில் நீங்கள் அநீதியை விதைக்கிறதை விட்டு விட்டு  நீதியை விதைத்து வாழ்க்கையில் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் அறுத்துக் கொள்ளுங்கள். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 


Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?