கர்த்தருடைய கரம் (UK Lockdown - Day 102)

உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும் (சங் 144:7)

மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும் (சங் 144:8)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தாவீது நெருக்கத்திலிருந்த போது தேவனுடைய சமூகத்தில் அவர் இரண்டு காரியங்களுக்காக கதறி அழுது ஜெபித்தார், 

1 )  ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்

2) அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்

பிரியமானவர்களே, கர்த்தருடைய கரம் மாத்திரமே தன்னை இயறகை அழிவுகளுக்கும், தீய சக்திகளுக்கும், தீய மனுஷர்களுக்கும் பாதுகாக்கும் என்று அவர் விசுவாசித்திருந்தார், அதனால் தான் அவர் உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்,   மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்“ என்று ஜெபித்தார். அல்லேலூயா ! 

ஆம் பிரியமானவர்களே, நீங்களும் தாவீதை போல் தேவனை உங்களுடைய எல்லாச் சூழ்நிலைகளிலும் விசுவாசித்து அவரை நோக்கி  “கர்த்தாவே உயரத்திலிருந்து உமது கரத்தை என் மீது நீட்டி, என்னை இயறகை அழிவுகளுக்கும், தீய சக்திகளுக்கும், தீய மனிஷர்களுக்கும், கொடிய நோய்களுக்கும், கொள்ளை நோய்களுக்கும் இரட்சியும் என்று மன்றாடும் போது தாவீதை இரட்சித்த தேவன் உங்களையும் இரட்சிக்க அவர் உண்மையுள்ளவராகவும், வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?