இயேசு உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் ( 1 பேதுரு 5 :7 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, உங்களை யாருமே விசாரிப்பதில்லை என்று கவலைபடுகிறீங்களா? உங்களை விசாரிக்க தேவன் இயேசு இருக்கிறார், அவர் உங்களை விசாரிக்கிறவர். ஆகவே உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்து விட்டு அவர் உங்களை விசாரிக்கிறவர் என்னும் சிந்தனை உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் பதிந்திருக்க வேண்டும்.அவர் அவரை நம்பின ஜனங்களை கை விடுவதில்லை, அவரே ஒவ்வொருவரையும் ஆதரிப்பவர், விசாரிப்பவர் அவரே ஒவ்வொருவருக்கும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் கொடுக்கிறவர்.ஆகையால் வேத வசனத்துக்கு கீழ் படிந்து உங்கள் கவலைகள், கண்ணீர்களையெல்லாம் தேவன் இயேசு மீது வைத்து விடுங்கள், அவர் உங்களை கை விட்டு விலகி போகிற தேவன் இல்லை, அவர் உங்களை விசாரிப்பார், உங்களுடைய தேவைகளை சந்திப்பார், உங்களுடைய கவலைகளை நீக்குவார், உங்கள் கண்ணீர்களை துடைப்பார்.நீங்க செய்...
Comments
Post a Comment