இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று இருதயத்தில் விசுவாசித்து, வாயினால் அறிக்கை செய்யுங்கள் (UK eased more lockdown restrictions - Day 116)

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோம 10:9)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டுமானால் நீங்கள் “இரண்டு” காரியங்களை செய்ய வேண்டுமென்று உங்களுக்கு வேதம் ஆலோசனை கூறுகின்றது, 

1) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட வேண்டும்

2) தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசிக்க வேண்டும்  


1) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட வேண்டும் : 

பிரியமானவர்களே, நீங்கள் இயேசு கிறிஸ்துவே உங்களுடைய இரட்சகர், ஆண்டவர் என்றும், அவரை நீங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் சேவிப்பீர்கள் என்றும் உங்களுடைய வாயினால் அறிக்கை பண்ண வேண்டும். அல்லேலூயா ! 

2) தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசிக்க வேண்டும்  

பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களுடைய பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தார் என்று உங்களுடைய இருதயத்தில் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?