நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? (UK eased more lockdown restrictions - Day 117)

அப்பொழுது தாவீது ராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? (2 சாமூ 7:18)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தாவீது  ராஜா கர்த்தருடைய சமூகத்தில் தன்னுடைய விண்ணப்பத்தையும், வேண்டுதல்களையும் ஏறெடுப்பதுக்கு முன்பாக அவர் தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் கர்த்தருடைய சமூகத்தில் “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?” என்று தாழ்த்துகிறார். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, தாவீது தேவ சமூகத்தில் ஏறெடுத்த இந்த வார்த்தைகள் மூலமாய் அவர் எப்படிப்பட்ட  குணாதிசயங்களை உடையவராக இருந்தார் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது, 

1) தேவன் மீது பிரியமுள்ளவராக இருந்திருக்கிறார் 
2 ) மனத் தாழ்மை உள்ளவராக  இருந்திருக்கிறார் 
3) கர்த்தர் மீது பயமும், பக்தியும் நிறைந்தவராக இருந்திருக்கிறார் 
4) உண்மையுள்ளவராக இருந்திருக்கிறார் 
5) நன்றியுள்ளவராக இருந்திருக்கிறார். அல்லேலூயா 

பிரியமானவர்களே, தாவீதினுடைய குடும்பத்தார் யூதா கோத்திரத்தை சேர்ந்தவர்கள், இந்த கோத்திரத்திலிருந்து தேவன் பிரபுக்களையும், ராஜாக்களையும் தேர்ந்தெடுத்திருந்தார், ஆனால் தாவீது, தான் ராஜா, தன்னுடைய குடும்பம் பெரியது என்று நினைக்காமல் கர்த்தருடைய சமூகத்தில் தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் மிகவும் தாழ்த்துகிறார், அவர் சொல்லுகிறார்என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?” என்கிறார். என்னவொரு மனத் தாழ்மை. அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, தாவீதை போல் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் கர்த்தருடைய சமூகத்தில் நம்முடைய விண்ணப்பங்களையும், வேண்டுதலைகளையும் தெரியப்படுத்துவதட்க்கு முன்பாக வாழ்க்கையில் இதுவரைக்கும் நம்மை கொண்டு வந்ததுக்காக, நம்மை வழி நடத்தி வந்ததுக்காக, நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளுக்காக, அதிசயங்களுக்காக, ஆசிர்வாதங்களுக்காக நம்மை வாழக்கையில் கனப்படுத்தியிருப்பதட்க்காக  நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்தி, “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?” என்று நம்மையும், நம்முடைய குடும்பத்தையும் தாழ்த்திக் கொள்ள வேண்டும், அல்லேலூயா ! நம்முடைய சொந்த முயற்சியினாலோ, நம்முடைய பலத்தினாலோ, நம்முடைய பராக்கிரமத்தினாலோ இந்த சிலாக்கியங்கள் நமக்கு கிடைக்கவில்லை, இது முற்று முழுதாக கர்த்தருடைய கிருபை. அல்லேலூயா ! அவருடைய கிருபை, இரக்கம், அன்பு, தயவு, உதவி நம்முடைய வாழ்க்கையில்  கிடைத்திருக்காவிட்டால் நாம் ஒன்றுமில்லை. அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?