என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது (UK eased more lockdown restrictions - Day 110)
என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? (சங் 42:2)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, இந்த 42 வது சங்கீதத்தை யார் எழுதினார் என்று குறிப்பிடப்படவில்லை, ஆனால் தாவீது தன்னுடைய எதிரிகளாகிய சவுலினால் அல்லது தன்னுடைய புதல்வன் அப்சலோமினால் நெருக்கப்படட போது பாடியிருக்கலாம் என்று வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
இந்த சங்கீத்தை பாடின போது அவர் எருசலேமில் இருக்கவில்லை, எதிரிகளுக்குப் பயந்து தன்னுடைய பிராரணை பாதுகாக்கும் படி குகைகளில் ஒளிந்து இருந்தார், அவரால் இப்போது முன்பு போல எருசலேமில் இருந்த தேவனுடைய ஆலயத்துக்கு சென்று அவரால் தேவனை ஆராதிக்க முடியவில்லை, ஆனால் அவருடைய இருதயம் எப்போதும் கர்த்தரோடு இணைந்து இசைந்திருந்தது, அவருடைய சிந்தனையெல்லாம் ஜீவனுள்ள தேவன் மீதும், அவருடைய ஆலயத்தின் மீதுமே இருந்தது, அதனால் தான் அவர் “என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? என்று பாடினார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, தாவீதை போல் எங்களுடைய ஆத்துமாவும் ஜீவனுள்ள தேவன் மீதே தாகமுள்ளதாக இருக்க வேண்டும். அல்லேலூயா !
தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக (மத் 22:37)
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Amen gbu all
ReplyDelete