விசுவாசமென்றால்“ என்ன? (UK eased more lockdown restrictions - Day 114)
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபிரே 11:1)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, “விசுவாசமென்றால்“ என்ன?
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வசனத்தில் “விசுவாசத்துக்கு” இரண்டு விதமான விளக்கங்கள் தேவ ஆவியானவர் கொடுத்திருக்கிறார்,
1) “நம்பப்படுகிறவைகளின் உறுதி“
2) விசுவாசமானது “ காணப்படாதவைகளின் நிச்சயம்”
1) விசுவாசமானது “நம்பப்படுகிறவைகளின் உறுதி“
பிரியமானவர்களே, விசுவாசத்தைக் குறிப்பிடும்'பிஸ்டிஸ்' (pistis)என்னும் கிரேக்கப்பதம், “அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை” என்று அர்த்தம் கொடுப்பதாகவுள்ளது. இன்னொரு முறையில் சொல்வதென்றால் “ஆதாரமே இல்லாமல் இருந்தாலும் அதை உறுதியாக நம்புகிறது தான் விசுவாசம்”. பிரியமானவர்களே, வேத புஸ்தகத்தில் தேவன் நமக்கு அநேக வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார், தேவன் அவற்றை நமது வாழ்க்கையில் நிறைவேற்றுவார் என்று விசுவாசித்து அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கையோடு கர்த்தருக்குள் காத்திருப்பது தான் விசுவாசமாகும். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசிப்பவர்களின் இருதயம் எப்போதும் மகிழ்ச்சினாலும், சதோஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிரம்பியிருக்கும். அல்லேலூயா !
2) விசுவாசமானது “ காணப்படாதவைகளின் நிச்சயம்”
பிரியமானவர்களே, நாம் நம்முடைய மாமிசக் கண்களினால் அநேக காரியங்களை காண்கிறோம், அவற்றை நம்புகிறோம். ஆனால் விசுவாசமானது நம்முடைய சரீரக் கண்களினால் காண முடியாதவற்றை நம்முடைய விசுவாசக் கண்களினால் கண்டு அவற்றை நம்புவதே விசுவாசமாகும். அவ்வாறு தங்களுடைய விசுவாசக் கண்களினால் கண்டு கர்த்தருக்குள் விசுவாசிப்பவர்களை கர்த்தர் அவர்களுடைய வாழ்க்கையில் கனப்படுத்துகிறவராக இருக்கிறார். அல்லேலூயா !
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் (எபி 11:6)
பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்க வேண்டும். அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Amen gbu all
ReplyDelete