உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் (UK eased more lockdown restrictions - Day 109)

தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் (சங் 48:9)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது, கர்த்தருடைய பிள்ளைகள் அவருடைய ஆலயத்தின் நடுவிலே அவருடைய கிருபையை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, அல்லேலூயா ! 

ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய  நம் ஒவ்வொருவருடைய இருதயமானது எப்போதும் நம்மை சிருஷ்டித்த, நம்மை பாவத்திலிருந்து இரட்சித்த, நம்மை அனுதினம் வழி நடத்துகிற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சிந்தனையினால் நிரப்பியிருக்க வேண்டும். மற்றும் நாம் தேவனுடைய ஆலயத்தின் நடுவிலே கூடி வரும் போது அவருடைய அன்பைக் குறித்து, அவருடைய கிருபையைக் குறித்து, அவருடைய இரக்கங்களைக் குறித்து சக விசுவாசிகளிடம் பகிர்ந்து கொள்ளுவதோடு, கர்த்தரை அறியாத பிள்ளைகளோடும் கர்த்தருடைய கிருபையை, அவருடைய அன்பை, அவருடைய மகத்துவங்களை குறித்துச் சொல்லி அவருடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்தி, மகிமைப்படுத்தி அவர்களை தேவனண்டையில் இரட்சிப்புக்குள்ளே வழிநடத்த வேண்டும். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 





Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?