கர்த்தருடைய ஆவினாலே எல்லாம் ஆகும்

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சக 4:6)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, செருபாபேல் தலைமையில் பாபிலோன் சிறையியிருப்பில் இருந்து திரும்பி வந்த ஜனங்கள் அவருடைய தலைமையில் தேவனுடைய ஆலயத்தை கட்ட  ஆரம்பித்தார்கள் அப்போது அவர்களுக்கு ஆலயத்தைக் கட்டுமான வேலைகளுக்கு தடைகளும், எதிருப்புக்களும் வந்தது, அப்போது செருபாபேல் சோர்ந்து போய் விடுகிறார், எங்கோ தங்களால் ஆலயத்தைக்  கட்டி முடிக்காமல் போய் விடுமோ என்கிறதான சந்தேகமும், பயமும் அவருக்கு வந்தது, அவர் கர்த்தரையும், அவருடைய வல்லமையையும் மறந்து போய் விடுகிறார், இந்த சூழ்நிலையில் தான் கர்த்தர் சொல்லுகிறார் “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று கூறி அவரை உட்ச்சாகப்படுத்துகிறார். அல்லேலூயா ! 

ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய ஊழியத்தை செய்கிற உங்களுக்கும் அவருடைய ஊழியத்தை தொடர்ந்து செய்ய முடியாமல் எதிர்ப்புக்களை சந்திக்கிறீர்களா? சோர்ந்து போகாதீர்கள். கர்த்தர் உங்களை அவருடைய வேலையை செய்யும் படி அழைப்பாரென்றால் நிச்சயமாக உங்களோடு இருந்து தடைகளை முறியடித்து, எவ்வாறு செருபாவேலுடனும், ஆலயத்தைக் கட்டுகிற கட்டுமான வேலையில் ஈடுபட்ட மற்ற யூத ஜனங்களோடும் இருந்து ஆலயத்தைக் கட்டி முடிக்க  உதவி செய்தாரோ அதேபோல் உங்களுக்கும் அவருடைய ஊழியத்தை செய்து முடிக்க உதவி செய்வார். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, கர்த்தருடைய ஊழியத்தை செய்ய மனித பெலமோ, மனுஷனுடைய பராக்கிரமோ தேவையில்லை, மாறாக அவருடைய ஆவியே நமக்குத் தேவையாக இருக்கின்றது. ஒருவேளை சூழ்நிலையைப் பார்த்தால் சாத்தியமில்லாதது போல் தோன்றலாம், ஆனால்  கர்த்தருடைய ஆவியினால் நாம் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியும், அல்லேலூயா ! 

என்னையல்லாமல் (இயேசு) உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (யோவா 15:5 )

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 




Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?