தேவனுடைய வசனம் சொல்லுகிறது, சோர்ந்துபோகிறவனுக்கு தேவன் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்று (ஏசாயா 40 :29) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். ஆம் பிரியமானவர்களே, வாழ்க்கையில் பாடுகள், போராட்டங்கள், உபத்திரவங்கள், நிந்தைகள், அவமானங்கள் வரும் போது நாம் அவற்றை தாங்கி கொள்ளுவதுக்கு பெலன் ,சத்துவம் இல்லாமல் சோர்ந்து பெலனற்று போகிறோம்,ஆனால் வேத வசனம் சொல்லுகிறது , தேவன் சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்று. அல்லேலூயா ! ஆகவே இப்படி நீங்கள் பெலனற்று போகும் போது உங்களுக்கு உதவி செய்ய ஒரு தேவன் உண்டு அவர்தான் உங்களை சிருஷ்டித்த இயேசு கிறிஸ்து.அவரிடம் நீங்கள் சூழ்நிலைகளை தாங்கி கொள்ள தேவையான பெலத்தையும் , சத்துவத்துவதையும் கேட்க்கும் போது அவற்றை கொடுக்க தேவன் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அது ...
Comments
Post a Comment