கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்
கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான் (யாத் 14 :14 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.பிரியமானவர்களே! கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்யும் பொழுது, உங்களுக்கு எதிராக யாரும் எதிர்த்து நிற்க முடியாது.உங்களுக்காக யுத்தம் செய்யும் கர்த்தரை நம்புங்கள்.உங்களுக்கு விரோதமாய் சத்துருக்கள் எழும்பும்போது, பயப்படாதிருங்கள். அவர்களுடைய , கோபம் , எரிச்சல் , பொறாமை உங்களை ஒன்றும் செய்யாது. உங்களை நேசிக்கின்ற ,உங்களை அரவணைக்கின்ற, உங்களைu பாதுகாக்கிற உங்களை சிருஷ்டித்த கர்த்தர் இயேசுவை நோக்கிப் பாருங்கள்.நீங்கள் அவருடைய வார்த்தைக்கு கீழ் படிந்து நீங்கள் அவர் மேல் உங்களுடைய விசுவாசத்தை வைத்து உங்களுடைய கண்ணீர், கவலை, பாரத்தை அவர் மேல் இறக்கி வைத்து விட்டு அமைதியாய் சும்மாய் இருந்தால் போதும். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்து ஜெயத்தை கொடுக்க அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா ! கர்த்தர் இயேச...