Posts

Showing posts from May, 2020

The Lord who delivers you in six troubles and protects you from evil (UK Lockdown - Day 69)

He shall deliver you in six troubles, Yes, in seven no evil shall touch you (Job 5:19)

ஆறு இக்கட்டுகளுக்கு உங்களை நீங்கலாக்கி ; பொல்லாப்பு உங்களை தொடாத வண்ணம் பாதுகாக்கும் கர்த்தர் (UK Lockdown - Day 69)

Image
(கர்த்தர்) ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது (யோபு 5:19) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, யோபுவின் பாவமே அவர் இப்போது இருக்கும் நிலைமைக்கு காரணம் என்று யோபுவை குற்றம் சுமத்தின அவருடைய  சிநேகிதனான எலிப்பாஸ் [வேதம் சொல்லுகிறது “இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை” (யோபு 2 : 10 )] “ கர்த்தர் ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது” என்று சில ஆறுதலான வார்த்தைகளையும் பேசி இங்கே யோபுவை ஆற்றித் தேற்றுவதை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய எங்களுக்கும் வாழ்க்கையில் யோபுவைப் போல உபத்திரவங்கள் வரலாம், துன்பங்கள் வரலாம், பாடுகள் வரலாம், ஆகவே இவ்வாறான நாட்களில் யோபுவின் சிநேகிதர்களைப் போல் நாங்களும் மற்றவர்களைப் ...

The blessings which God gives to his children (UK Lockdown - Day 68)

You shall know that your tent is in peace, you shall visit your dwelling and find nothing amiss (Job 5:24)

கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்கள் (UK Lockdown - Day 68)

Image
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர் (யோபு 5:24) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். மேலே கூறப்பட்டுள்ள வசனத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விரும்புகின்றேன்,  1 . உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்  2 .  உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர் 1 . உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்  இதன் அர்த்தம் : ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசித்து அவரை  ஆண்டவராகவும், இரச்சகராவும் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஏற்றுக் கொண்டு அவரை  மெய்யாகவே முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும் சேவிக்கும் அவருடைய பிள்ளைகளாகிய உங்களுடைய கூடாரத்தில் (வீட்டில்) அதாவது உங்களுடைய குடும்பத்தில் கர்த்தருடைய நிரந்தரமான மெய்யான சமாதானமும், நிம்மதியும், மகிழ்ச்சியும், சந்தோஷம...

The Lord is our strength, and saving refuge (UK Lockdown - Day 67)

The Lord is their strength, And He is the saving refuge of His anointed (Ps 28:8)

கர்த்தர் நமது பெலனும், அரணான அடைக்கலமுமாயிருக்கிறார் (UK Lockdown - Day 67)

Image
கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர் (சங் 28:8) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வசனத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விரும்புகின்றேன்.  பிரியமானவர்களே, கர்த்தர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை இரச்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்ட ஜனங்களுக்கு, கர்த்தர் இயேசு கிறிஸ்து  1 .  பெலனாக இருக்கிறார்  2 . அரணான அடைக்கலமாக இருக்கிறார் அல்லேலூயா !  பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே  நமக்கு பெலனாகவும், அரணான அடைக்கலமாகவும் இருக்கும் போது நாம் எதுக்கு நமக்கு எதிரிடையாக இருக்கும் சூழ்நிலையைப் பார்த்து பயப்பட வேண்டும், கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார். அல்லேலூயா ! தாவீதுக்கு அவருடைய ஆபத்து வேளைகளில் பெலனாகவும், அரணான அடைக்கலமாக இருந்த கர்த்தர் நிச்சயமாக அவருடை...

God who doesn’t want mankind to die in sin (UK Lockdown - Day 66)

As I live,’ says the Lord God, I have no pleasure in the death of the wicked, but that the wicked turn from his way and live (Eze 33:11) God not willing that any should perish but that all should come to repentance (2 Pet 3:9) Even so it is not the will of your Father who is in heaven that one of these little ones should perish (Matt 18:14)

பாவத்தில் மனுஷர்கள் மரிப்பதை விரும்பாத தேவன் (UK Lockdown - Day 66)

Image
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் (எசேக்கி 33:11) ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2  பேதுரு 3:9) ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல (மத் 18:14) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்துக்களின் தேவன் கிருஷ்ணன் இந்த பூலோகத்தில் மானிடனாக பிறந்தது துன்மார்க்கனான நரகாசுரனை அழிப்பதட்க்காக என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.  ஆனால் தேவன் இயேசு கிறிஸ்து இந்த பூலோகத்துக்கு மானிடனாக பிறந்ததன் நோக்கம் பாவிகளை / துன்மார்க்கர்களை அழிப்பதட்க்காக அல்ல அவர்களை அவர்களது பாவ வாழ்க்கையிலிருந்து இரட்சிப்பத...

All my desire is before You (UK Lockdown - Day 65)

Lord, all my desire is before You; and my sighing is not hidden from You (Ps 38:9)

என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது (UK Lockdown - Day 65)

Image
ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை (சங் 38:9) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது பாடுகளுக்கூடாய் கடந்து சென்ற போது அவர் கர்த்தருடைய சமூகத்தில் தன்னுடைய பாரங்களை விசுவாசத்தோடு இறக்கி வைக்கிறார். அவர் சொல்லுகிறார் “ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை” என்று. அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, கர்த்தருக்கு மறைவானது என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை, சகலதும் அவருக்கு முன்பாக நிர்வாணமாய் இருக்கின்றது, இங்கே தாவீதின் தவிர்ப்பும், அவருடைய தேவைகளும் கர்த்தருக்கு மறைவாயிருக்கவில்லை, கர்த்தர் சகலத்தையும் அறிந்திருந்தார், தாவீதுக்கு எதை எப்போது கொடுக்க வேண்டும் என்பதையும் கர்த்தர் அறிந்திருந்தார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, நீங்களும் தாவீதை போல் உங்களுடைய அங...

The Lord will be a light to me (UK Lockdown - Day 64)

Do not rejoice over me, my enemy; when I fall, I will arise; when I sit in darkness, The Lord will be a light to me (Mic 7:8)

கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் (UK Lockdown - Day 64)

Image
என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் (மீகா 7:8) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கும், எனக்கும்  எதிராக இன்று பிசாசானவன் செயல்பட்டு வருகிறான், அவனது நோக்கமே எங்களை  கர்த்தரிடம் இருந்து பிரித்து வாழ்க்கையில் வீழ்த்துவதே, அவன் நாங்கள் எப்போது விழுந்து போவோம் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பிரியமானவர்களே, நீதிமான் 24:16 இவ்வண்ணமாய் சொல்லுகின்றது “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்” என்று. ஆகவே பிரியமானவர்களே வீழ்ந்து விட்டேனே என்று சோர்ந்து போகாதீர்கள், கர்த்தருடைய பிள்ளைகள் வாழ்க்கையில் ஒரு போதும் தோற்றுப் போவதில்லை. அல்லேலூயா! ஆகவே பிரியமானவர்களே, சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக இருக்கும் போது இன்றையிலிருந்து அவிசுவாச வார்த்தைகளை பேசுவதை நிறுத்தி விட்டு கர்த்தர் இயேசு உங்களுக்கு கொடுத்திருக்...
Indeed My hand has laid the foundation of the earth,And My right hand has stretched out the heavens; when I call to them, They stand up together [in obedience to carry out My decrees] (Isa 48:13)

நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும் (UK Lockdown - Day 63)

Image
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும் (ஏசா 48:13) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, “என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்“ என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் கூறுவதன் மூலமாய் தான் சர்வ வல்லமை நிறைந்தவர் என்றும் தன்னால் செய்ய முடியாத காரியம் என்று ஒன்றுமில்லை, தான் வானத்தையும், பூமியையும் அதில் உள்ளவை யாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்பதை அவர் அவர்களுக்கு தெளிவுபடுத்துகிறார். அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, நம்முடைய சூழ்நிலை நமக்கு நேர் எதிரிடையாக இருந்தாலும்  கர்த்தர் தம்முடைய கரத்தை நம்மேல் நீட்டிருக்கும் போது நாம் எதைக் குறித்தும் சிந்திக்கவோ, பயப்படவோ, கலக்கம் அடையவோ வேண்டி...

Let us not love in word or in tongue, but in deed and in truth (UK Lockdown - Day 62)

My little children, let us not love in word or in tongue, but in deed and in truth (1 Joh 3:18)

வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூர வேண்டும் (UK Lockdown - Day 62)

Image
என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம் (1 யோவா 3:18) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, நாம் மற்றவர்களிடத்தில் அன்பு கூறும் போது வசனத்தினாலும், நாவினாலும் அன்பு கூர்ந்தால் போதாது, அவ்வாறு வாயின் வார்த்தையினாலும், நாவினாலும் மாத்திரம் பிறரிடத்தில் அன்பு கூறுவது இயேசுவின் அன்பல்ல, நம்முடைய கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூர வேண்டும். அதுவே இயேசுவின் அன்பு. அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Bear one another’s burdens, and so fulfill the law of Christ (UK Lockdown - Day 61)

Bear one another’s burdens, and so fulfill the law of Christ (Gal 6:2)

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்பதே கிறிஸ்துவின் பிரமாணம் (UK Lockdown - Day 61)

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் (கலா 6:2) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறை வேற்ற வேண்டும் என்று வேதம் நமக்கு ஆலோசனை கூறுகின்றது. அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, கிறிஸ்துவின் பிரமாணம் அன்பின் பிரமாணம். கிறிஸ்துவினுடைய சீஷர்களாகிய நாம் அவருடைய அடிச் சுவடுகளை பின்பற்ற வேண்டும். அடுத்தவர்கள் பாடுகளுக்கூடாய், வேதனைகளுக்கூடாய் கடந்து செல்லும் போது தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவர்கள் அனுபவிக்கும் பாடுகளை கண்டும் காணாதவர்களைப் போல் இருந்து விடாமல், அவர்களை அன்போடும், கருசனையோடும் விசாரித்து நம்மால் முடிந்த அளவு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து இயேசு கிறிஸ்துவினுடைய  பிரமாணமாகிய அன்பின் பிரமாணத்தை நிறை வேற்ற வேண்டும். அல்லேலூயா !...

The Lord who looks down and sees from Heaven (UK Lockdown - Day 60)

My eyes flow and do not cease, without interruption, Till the Lord from heaven looks down and sees (Lam 3:49-50)

பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்க்கும் கர்த்தர் (UK Lockdown - Day 60)

Image
கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும் (புல 3:49) என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது (புல 3:50) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் அந்நிய தேசத்தில் சிறைக் கைதிகளாக இருந்த போது அவர்களுடைய இருதயம் கவலையினாலும், கண்ணீரினாலும் நிறைந்திருந்தது, இந்த சூழ்நிலையில் தான் கர்த்தருடைய தீக்கதரிசியான எரேமியா "கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும் என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது" என்று சொல்லுகிறார். ஆம் பிரியமானவர்களே, அன்று யூதா ஜனங்கள் இருந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் தான் இன்று இந்த பூலோகத்தில் வாழும் நாம் ஒவ்வொருவரும் கொள்ளை நோயாகிய கொரோனா நிமித்தம் நம் எல்லாருடைய இருதயமும் பயத்தினாலும், திகிலினாகிலும், துக்கத்தினாலும் நிறைந்திருக்கிறது.  பிரியமானவர்களே, கர்த்தருடைய சமூகத்தில் நாம் இடைவிடாமல் அவருடைய  இரக்கங்களுக்...

(UK Lockdown - Day 59)

Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢

(UK Lockdown - Day 59)

தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢

(UK Lockdown - Day - 58)

Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢

(UK Lockdown - Day 58)

தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢

Whoever believes on Jesus will not be put to shame (UK Lockdown - Day 57)

For the Scripture says, “Whoever believes on Him will not be put to shame (Rom 10:11)

தேவன் இயேசுவை நம்பின யாரும் வெட்கப்பட்டு போனதில்லை (UK Lockdown - Day 57)

அவரை (இயேசு கிறிஸ்துவை) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது (ரோம 10:11) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்றும், அவரே இரச்சகர் என்றும் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.  பிரியமானவர்களே, தேவனை விசுவாசிக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போனதில்லை. “நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்” என்று  (ஏசா 45:17 இல் வாசிக்கிறோம். அல்லேலூயா !  பிரியமானவர்களே, உங்களுடைய சூழ்நிலையைப் பார்க்கும் போது நீங்கள் வெட்கப்பட்டு போனது போல் தோன்றலாம், ஆனால் அது உண்மையல்ல, தேவன் அவரை நம்பின ஒருவரையும் வெட்கப்பட்டு போக விட்டதில்லை.  ஆகவே நீங்கள் உங்களுடைய இந்த நீளக்கமான சூழ்நிலையில் தொடர்ந்து தேவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், தேவன் உ...

For the eyes of the Lord are on the righteous (UK Lockdown - Day 56)

For the eyes of the Lord are on the righteous, And His ears are open to their prayers (1 Pet 3:12)

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (UK Lockdown - Day 56)

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது (1 பேது 3:12) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, நாம் கிறிஸ்து மேல்  வைத்திருக்கிற விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம். அல்லேலூயா ! பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது, “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது” என்று.  பிரியமானவர்களே, இந்த வசனத்தை நான்  இரண்டு பகுதிகளாக நான் பிரிக்க விரும்புகின்றேன்  (1 ) கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. (2 ) கர்த்தருடைய செவிகள் நீதிமான்களுடைய வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது. 1 ) கர்த்தருடைய கண்கள் அவர்களுடைய பிள்ளைகளாகிய நம்மேல் நோக்கமாயிருக்கிறது. பிரியமானவர்களே, கர்த்தர் தம்முடைய கண்களை எப்போது...

My soul shall be joyful in the Lord; It shall rejoice in His salvation (UK Lockdown - Day 55)

And my soul shall be joyful in the Lord; It shall rejoice in His salvation (Ps 35:9)

என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும் (UK Lockdown - Day 55)

Image
என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும் (சங் 35: 9)  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது அநேக பாடுகளுக்கூடாக கடந்து சென்ற போதிலும்  அவர் சொல்லுகிறார் “என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்” என்று. அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, தாவீதுடைய ஆத்துமா பாடுகளின் மத்தியிலும்  கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்திருந்தது போல் நம்முடைய ஆத்துமாவும் இந்த கொள்ளை நோயின் மத்தியிலும் கர்த்தாரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்திருக்கட்டும். யாராலும், நாம் கர்த்தரிடத்தில் வைத்திருக்கிற அன்பிலிருந்து பிரிக்க முடியாது. அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Let all  that  you  do  be done with love (1 Cor 16:14)

நம்முடைய காரியங்களெல்லாம் அன்போடே செய்ய வேண்டும் (UK Lockdown - Day 54)

Image
உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது (1 கொரி 16:14). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, “நம்முடைய  காரியங்களெல்லாம் அன்போடே செய்ய வேண்டும்” என்று வேதம் எங்களுக்கு ஒரு ஆலோசனையைக் கொடுக்கின்றது.  ஆம் பிரியமானவர்களே, நாம் செய்கிற ஒவ்வொரு காரியங்களிலும் அன்பு வெளிப்பட வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமக்கு விரோதமாக காரியங்களை செய்த அத்தனை சகோதரர்களையும் மன்னித்து அவர்களை அன்போடு ஏற்றுக் கொண்டது போல் அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவருடைய அரிச் சுவடடை பின்பற்றி சகோதரர்கள் நமக்கு விரோதமாக காரியங்களை செய்யும் போது நாமும் அவர்களை மன்னித்து, அவர்களை அன்போடு ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லேலூயா !  ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Seek good and not evil, That you may live (UK Lockdown - Day 53)

Seek good and not evil,  That you may live;  So the  Lord  God of hosts will be with you, As you have spoken (Amos 5:14)

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள் (UK Lockdown - Day 53)

Image
நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார் (ஆமோ 5:14) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய தீர்க்கதரிசி ஆமோஸ் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவர்கள் பிழைக்கும் படி இங்கே ஒரு ஆலோசனையைக் கொடுக்கிறார் “நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்” என்று. அல்லேலூயா !  பிரியமானவர்களே, நன்மையைத் தேடுவது என்பது, கள்ளம் கபடமில்லாத உங்களுடைய ஜீவியத்தில் இருக்க வேண்டியதான உண்மை, நேர்மை, கண்ணியம், நீதி, அன்பு என்பவைகளைக் குறிக்கின்றது. நீங்கள் எந்த காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் நீதி, நேர்மை, உண்மை இருக்க வேண்டும். பிறருக்கு நன்மை செய்யும் போது பிரதி பலனை எதிர்பாராமல் அன்போடு முழு ம...

The Lord who answers the prayer (UK Lockdown - Day 52)

And do not hide Your face from Your servant, For I am in trouble; Hear me speedily (Ps 69:17)

விண்ணப்பத்துக்கு பதில் கொடுக்கும் கர்த்தர் (UK Lockdown - Day 52)

Image
உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும் (சங் 69:17) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது இந்த 69 வது சங்கீதத்தை தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தரை நோக்கி  பாடியிருக்கிறார்.  பிரியமானவர்களே, கர்த்தர் தன்னை தன்னுடைய  நெருக்கங்களிலிருந்து விடுவிக்குமாறும்,  பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் கர்த்தருடைய சமூகத்தில் “உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்” என்று விண்ணப்பம் பண்ணுகிறார். அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, இன்று இந்த பூலோகத்தில் வாழும் நாம் எல்லாரும் கொரோனா கிருமியின் நிமித்தம்  நெருக்கத்திலிருக்கிறோம், பிரியமானவர்களே நாமும் தாவீதைப் போல் கர்த்தருடைய சமூகத்தில் கர்த்தரை நோக்கி “உமது முகத்தை உமது ...

Lord, what is man, that you take knowledge of him! or the son of man, that you make account of him (UK Lockdown - Day 51)

Lord, what is man, that you take knowledge of him! or the son of man, that you make account of him (Ps 144:3) Man is like to vanity: his days are as a shadow that passes  away (Ps 144:4)

கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்? (UK Lockdown - Day 51)

Image
கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்? (சங் 144:3) மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம் (சங் 144:4) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் தாவீதின் மீது அன்பாய், கிருபையாய் இருக்கிறார், அவர் அவருக்கு கோட்டையாய், அரணாய், அடைக்கலமாய் இருந்து அவரை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து வந்தார். இதெயெல்லாம் தாவீது பார்க்கும் போது அவருக்கு மிகுந்த ஆச்சரியமாய் இருக்கின்றது, தானோ ஒரு பாவி, மாமிசப் பிறவி, கர்த்தரிடமிருந்து அவருடைய கிருபையையும், நன்மைகளையும் பெற்றுக் கொள்ள மனுஷனாகிய தான் எந்த விதத்திலும் பாத்திரவானல்ல, எந்த தகுதியும் இல்லாதவன் என்பதை அவர் உணர்ந்து கர்த்தருடைய சமூகத்தில் தன்னை வெகுவாய் தாழ்த்தி,  “கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்க...

The Lord on high is mightier (UK Lockdown - Day 50)

The Lord on high is mightier than the noise of many waters, than the mighty waves of the sea (Ps 93:4)

கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர் (UK Lockdown - Day 50)

Image
திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர் (சங் 93:4) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த சங்கீதத்தைப் பாடிய சங்கீதக்காரன் திரளான தண்ணீர்களின் இரைச்சலையும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளையும் கர்த்தரின் வல்லமையோடு ஒப்பிடுப் பேசுகிறார். அவர் சொல்லுகிறார் “திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்” என்று. அல்லேலூயா !  பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தர் இயேசு கிறிஸ்து காற்றையும், கடலையும் பார்த்து இரையாதே அமைதலாயிரு என்று சொன்ன போது காற்றும், கடலும் அவருக்கு கீழ்ப்படிந்தது, அவர் சகலத்தையும் ஆளுகை செய்கிறார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, கர்த்தர் நம்மை ஆளுகை செய்யும் போது நாம் திரளான தண்ணீர்களின் இர...

I will praise you for ever and I will wait on your name (UK Lockdown - Day 49)

I will praise you for ever, because you have done it: and I will wait on your name (Ps 52:9)

உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன் (UK Lockdown - Day 49)

நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன் (சங் 52:9) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கிறார்.  பிரியமானவர்களே, இந்த வசனத்தை நான் மூன்று பகுதிகளாக உடைக்க விரும்புகின்றேன்.  1. நீரே (கர்த்தரே) இதைச் செய்தீர் 2. உம்மை (கர்த்தரை) என்றென்றைக்கும் துதித்து 3. உமது (கர்த்தருடைய) நாமத்திற்குக் (வேளைக்காக) காத்திருப்பேன் பிரியமானவர்களே, தாவீது வாழ்க்கையில் ஜெயிப்பதட்க்கு இந்த மூன்று காரியங்களே காரணமாயிருந்தது. தாவீது, கர்த்தர் தம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை, கிரியைகளை நினைத்து அவருக்கு அவர் நாள்தோறும் நன்றி செலுத்தி அவரைத் துதித்து அவருடைய வேளைக்காக பொறுமையோடு காத்திருந்தார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, தாவீதை போல் நாமும் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன...

The unbelieving evil heart (UK Lockdown - Day 48)

Beware, brethren, lest there be in any of you an evil heart of unbelief in departing from the living God (Heb 3:12)

அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் (UK Lockdown - Day 48)

Image
சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள் (எபி 3:12). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, இங்கே தேவ ஆவியானவர் தேவ பிள்ளைகளாகிய நமக்கு ஒரு காரியத்தைக் குறித்து எச்சரிக்கிறார், “அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்” என்று. ஆம் அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் நம்மிடத்தில் இருக்கக் கூடாது. பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது, “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவர...

Desirous of vain glory (conceited), provoking one another, envying one another (UK Lockdown - Day 47)

Image
Let us not be desirous of vain glory (conceited), provoking one another, envying one another (Col 5:26)

வீண்புகழ்ச்சி, கோபமூட்டுதல், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளுதல் (UK Lockdown - Day 47)

Image
வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம் (கலா 5:26). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் “வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்க வேண்டும்” என்று வேத வசனம் நம்மை எச்சரிக்கின்றது.  பிரியமானவர்களே, மனுஷரிடத்தில் இருந்து வருகின்ற புகழ்ச்சி வீண் புகழ்ச்சியாகவே இருக்கின்றது, மனுஷன் இன்றைக்கு உங்களை புகழுவான் அதே மனுஷன் நாளைக்கு உங்களை இழிவாக பேசுவான், அது மனுஷனுடைய இயற்கயான சுபாவம். ஆகவே நீங்கள் மனுஷன் உங்களை புகழ வேண்டும் என்று கர்த்தருடைய ஊழியத்தை செய்வீர்களானால் ஒருநாள் வெட்கப்பட்டு போய் விடுவீர்கள். பிரியமானவர்களே நீங்கள் மனுஷனிடமிருந்து வரும் வீண் புகழ்ச்சியை விரும்பாதீர்கள். அல்லேலூயா !  பிரிய...

You heard the voice of my supplications when I cried out to You. (UK Lockdown - Day 46)

For I said in my haste,“I am cut off from before Your eyes”; Nevertheless You heard the voice of my supplications when I cried out to You (Ps 31:22)

என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர் (UK Lockdown - Day 46)

உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர் (சங் 31:22) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத  வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது வாழ்க்கையில் நெருக்கங்களுக்கூடாகவும், பாடுகளுக்கூடாகவும், உபத்திரவங்களுக்கூடாகவும் கடந்து சென்ற போது அவர் மனக்கலக்கத்தில் “உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன்” என்று வாழ்க்கையில் முதன் முறையாக அவிசுவாச வார்த்தைகளை பேசுகிறார், தாவீது மனக்கலக்கத்தில் அவிசுவாச வார்த்தைகளைப் பேசினாலும் அவர் கர்த்தரை விட்டு விலகிப் போகவில்லை, கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறார், கர்த்தரும் தாவீதுக்கு தன்னுடைய முகத்தை மறைக்காமல் மனமிரங்கி தாவீதுடைய விண்ணப்பத்துக்கு செவி கொடுக்கிறார். அல்லேலூயா ! பிரியமானவர்களே, தாவீதைப் போல நாங்களும் எங்களுக்கு நேரிட்...

Peace from God (UK Lockdown - Day 45)

The Lord will give strength to His people; The Lord will bless His people with peace (Ps 29:11) My peace I give to you; not as the world gives do I give to you. Let not your heart be troubled, neither let it be afraid (Jo 14:27)

கர்த்தருடைய சமாதானம் (UK Lockdown - Day 45)

கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார் (சங் 29:11). என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (யோவா 14:27) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது, கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிக்கிறார் என்று, அவர் கொடுக்கின்றதான சமாதானம் உலகப் பிரகாரமான சமாதானமல்ல, அவர் கொடுக்கின்றதான சமாதானமும், சந்தோஷமும் நித்தியமானது, இந்த பூலோகத்தில் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்களில் மிகவும் பெரியது கர்த்தருடைய சாமாதானமே. அல்லேலூயா !  பிரியமானவர்களே, கர்த்தர் இயேசு கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார் “உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” என்று. ஆகவே பிரியமானவர்களே, இந்த பூலோகத்தில் நடக்கும் காரியங்...

The righteous shall be glad in the Lord, and trust in Him (UK Lockdown - Day 44)

The righteous shall be glad in the  Lord , and trust in Him (Ps 64:10)

நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான் (UK Lockdown - Day 44)

Image
நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான் (சங் 64:10). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது இந்த 64 வது சங்கீதத்தை தான் எதிரிகளினால்  நெருக்கப்பட்டு, அவர்களினால் துன்புறுத்தப்பட்டு இருந்த ஒரு சூழ்நிலையில் எழுதியிருக்கிறார்.  பிரியமானவர்களே, அன்று தாவீது எதிரிகளினால் நெருக்கப்பட்டு, அவருடைய சூழ்நிலை அவருக்கு எதிராக இருந்த போதிலும், அந்த எதிடையான சூழ்நிலைகளினால் கர்த்தர் மீது அவர் வைத்திருந்த அன்பிலிருந்து பிரிக்க முடியவில்லை என்பதட்க்கும், அவர் எப்போதும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருந்து, கர்த்ரையே நம்பியிருந்தார் என்பதட்க்கும் சங்கீதம் 64 :10 ஆதாரமாக இருக்கின்றது, அல்லேலூயா !  பிரியமானவர்களே, இன்றைக்கு உங்களுடைய சூழ்நிலையும் தாவீதை போல் உங்களுக்கு எதிராக இருக்கின்றதா? கவலைப்படாதீர்கள், நீங்களும் தாவீதை போல்  உங்களுடைய எதிரிடையா...

Lord, My hopes in you (UK Lockdown - Day 43)

And now, Lord, what do I wait for? My hope is in You (Ps 39:7)

நீரே என் நம்பிக்கை (UK Lockdown - Day 43)

Image
இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை (சங் 39:7).  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது மிகவும் நெருக்கத்தில் இருந்த போது அவர் தேவனை நோக்கி ஜெபித்தார் ஆனால் அவர் எதிர்பார்த்த சில காரியங்கள் வாழ்க்கையில் ஏமாற்றத்தையே கொண்டு வந்தது, அவ்வேளையில் தான் அவர் தேவனை நோக்கி சொல்லுகிறார் “இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை” என்று.  ஆம் பிரியமானவர்களே, தாவீதை போல் உங்களுக்கும் வாழ்க்கையில் அனுபவம் இருந்திருக்கலாம், நீங்கள் நம்பின, எதிர்பார்த்த காரியங்கள் உங்களுடைய வாழ்க்கையில் இன்னும் நிறைவேறாமலோ அல்லது ஏமாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம், கர்த்தர் இன்னும் கொரோனாவை அழிக்காது இருக்கலாம், ஆதலால் சோர்ந்து போகாதீர்கள். நீங்களும் தாவீதை போல் சோர்ந்து போகாமல் கர்த்தர் மீது தொடர்ந்து உங்களுடைய நம்பி...

Fear not (UK Lockdown - Day 42)

You drew near on the day I called on You, And said, “Do not fear (Lamen 3:57)

பயப்படாதே (UK Lockdown - Day 42)

Image
நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர் (புல 3:57) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, உங்களுடைய  சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக இருக்கும் போது யாரிடம் உங்களுடைய பிரச்சனைகளை சொல்லுகிறீர்கள்?  மனுஷனிடமா ? தேவனிடமா ?  பிரியமானவர்களே, மனுஷருக்கு உங்களுடைய பிரச்சனைகளை சொல்லுவதினால் உங்களுடைய கவலைகள், துக்கங்கள் குறையப் போவதில்லை. ஆனால் கர்த்தர் இயேசுவை நீங்கள் விசுவாசித்து, அவரிடம் உங்களுடைய பிரச்சனைகளை தெரியப்படுத்தும் போது அவர் உங்களை ஆற்றித் தேற்றி அரவணைத்து பயப்படாதே என்று ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவதோடு, உங்களை உங்களுடைய ஆபத்தான சூழ்நிலையிலிருந்து விடுவித்து பாதுகாத்துக் கொள்ளவும் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Who is he who speaks and it comes to pass, When the Lord has not commanded it? (UK Lockdown - Day 41)

Who is he who speaks and it comes to pass, When the Lord has not commanded it? (Lam 3:37)

ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? (UK Lockdown - Day 41)

Image
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? (புல 3:37).  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய தீர்க்கதரிசி நெருக்கத்திலிருந்த யூதா குடிகளையும், எருசலேம் ஜனங்களையும் பார்த்துச் கேட்க்கிறார் “ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?” என்று.  ஆம் பிரியமானவர்களே, அன்று யூதா ஜனங்களுக்கு சூழ்நிலை விரோதமாக இருந்தது போல, நம்முடைய சூழ்நிலைகளும் நமக்கு எதிராக, ஒரு அடைக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற இந்நாட்களில் அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் உருவாகியுள்ளனர், இவர்கள் ஒரு குறிப்பிடட காலத்தை, ஒரு நாளை கூறி இந்த நாட்களில் கொரோனா அழிந்து போய் விடும் என்று கூறுகிறார்கள்.  பிரியமானவர்களே, தங்களுடைய பெயர்களை பிரசித்தப்படுத்துவதட்க்காக கர்த்தர் சொன்னார் என்று பொய்யாக இயேசுவின் நாமத்தில் தீர்க்க தரிசனம்...

He who trusts in the Lord will be prospered (UK Lockdown - Day 40)

He who trusts in the  Lord  will be prospered (Pro 28:25)

கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் (UK Lockdown - Day 40)

Image
கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் (நீதி 28:25 ) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது, “கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்” என்று. பிரியமானவர்களே, நீங்கள் யார் மீது உங்களுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறீர்கள்? கர்த்தரை நம்புகிறவனுடைய வாழ்க்கை எவ்வாறு செழித்திருக்கும் என்பதை குறித்து வேதம் இவ்வண்ணமாய் சொல்லுகின்றது,  “கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்” (எரேமியா 17:7-8) ஆம் பிரியமானவர்களே, நீங்கள் கர்த்தர் மீது உங்களுடைய நம்பிக்கையை வைத்து, உங்களுடைய பாரங்களை, பிரச்சனை...