நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி 23:23). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் சர்வவல்லமை நிறைந்தவர், மனுஷர்களால் முடியாத காரியத்தை கர்த்தர் செய்கிறார், மனுஷர்களாகிய நம்மை பொறுத்த வரையில் சமீபமாய் இருப்பதும், தூரமாய் இருப்பதும் இரண்டு வெவேறு காரியங்கள், நம்மால் தூரத்தில் நடக்கின்ற காரியங்களை பார்க்கவும் முடியாது, கேட்கவும் முடியாது, ஆனால் நம்முடைய ஆண்டவரினால் தூரத்தில் நடக்கிற காரியங்களை பார்க்கவும் முடியும், கேட்கவும் முடியும், மனுஷர்களாகிய நம்மால் இருட்டில் ஒன்றையும் பார்க்க முடியாது, ஆனால் கர்த்தருக்கோ எல்லாம் வெளியரங்கமாய் இருக்கின்றது, அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை, அவர் ஒரே வேளையில் எல்லா இடங்களிலும் இருக்கிறவர், கர்த்தர் சர்வ வல்லமை நிறைந்தவர். தூர தேசத்தில் இருக்கும் உங்கள் பிள்ளைகளால் நீங்கள் அவர்களுக்காய் ஜெபிக்கும் ஜெபத்தை கேட்...