எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக (சங் 90:17) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய தாசனாகிய மோசே “எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக” என்று மனதுருகி தேவ சமூகத்தில் ஜெபிக்கிறார். பிரியமானவர்களே, பிரியம் என்னும் பதத்துக்கு விருப்பம், அன்பு, தயவு, இரக்கம் என்று அநேக அர்த்தங்கள் உண்டு. பிரியமானவர்களே, தேவன் தாவீதைக் குறித்து “ ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்” (அப்போ 13:22 ) என்று சாட்சி கொடுத்தார். பிரியமானவர்களே, தாவீது வாழ்க்கையில் தேவனுக்கு பிரியமானவற்றை செய்து அவரை பிரியப்படுத்தினதால் தேவனுடைய பிரியம், தயவு, இரக்கம் தாவீதுக்கு வாழ்க்கையில் கிடைத்தது. அல்லேலூயா ! பிரியமானவர்களே, நாங்களும் மோசேயைப் போல், தாவீதை போல், தானியலைப் போல் தேவனுக்கு பிரிய...