Posts

Showing posts from September, 2019

God resists the proud

The word of God says that, God opposes the proud and he gives grace to the humble (1 Peter 5:5).Pride in caste, pride in money, pride in study, pride in beauty, pride in talents etc.Examine yourself and if you have any pride in your heart remove it.If you have proud, God who created you will resist you.The scripture warns us that, Pride goes before destruction. Therefore, Humble yourself in the presence of the Lord and confess your sins.Then the grace of God will surround you.May the Lord Jesus bless you and your family. Bro.Sanjeev Vivekanandarajah.

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

வேதம் சொல்லுகிறது,பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் ( 1பேதுரு 5:5 ) ஜாதி பெருமை , பணப் பெருமை படிப்பில் பெருமை , அழகில் பெருமை , தாலந்துகளில் பெருமை etc. உங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்களுடைய உள்ளத்தில் பெருமை இருக்கும் என்றால் பெருமையை உள்ளத்தில் இருந்து எடுத்து போடுங்கள்.உங்களிடம் பெருமை இருக்குமானால் உங்களை படைத்த தேவனே உங்களை எதிர்த்து நிட்பார், வேத வசனம் எங்களை எச்சரிக்கிறது ‘அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.ஆகவே கர்த்தருடைய சமுகத்திலே உங்களைத் தாழ்த்தி உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்.அப்போது தேவனுடைய கிருபை உங்களை சூழ்ந்து கொள்ளும்.கர்த்தர் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

God who hears the cry

The scripture says that ,I waited patiently for the LORD; and he inclined unto me, and heard my cry ( Psalm 40:1).One should have patience in his life.The scripture says that , I waited patiently for the Lord.Are you worrying that, why do I have so much problems in my life?Don’t worry, God Jesus loves you,he is caring of you and your family.He is looking upon you all the time.The people you trust, have promised you something and may have not lived up to their words.But God who created you never forgets you, he will not forsake you.The only thing you need to do is have faith in God Jesus, and wait patiently for Him, he will inclinine on to you hearing your cry and will release you.Hallelujah! May God Jesus bless you and your family.Bro.Sanjeev Vivekanandarajah.

கூப்பிடுதலை கேட்க்கும் தேவன்

வேத வசனம் சொல்லுகிறது , கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.( சங்கீதம் 40:1 ) வாழ்க்கையில் பொறுமை வேண்டும்.வேத வசனமே சொல்லுகிறது கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் என்று, ஏன் என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சினை என்று கலங்கி போய் இருக்கிறீங்களா?, எப்போது எனது குடும்ம்ப பிரச்சினை தீரும், என்று எதிர் பார்த்து கொண்டு இருக்கிறீங்களா? கவலையே படாதிங்கே, உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் குறித்து தேவன் இயேசு மிகவும் அக்கறையோடு , கரிசனையோடு இருக்கார் உங்களை மிகவும் நேசிக்கிறார்.அவர் எல்லாவற்றயும் பார்த்து கொண்டு தான் இருக்கார் உங்களை  அவர் கை விட மாட்டார்,ஒரு வேளை நீங்கள் நம்பின மனுஷர்கள் உங்களை கை விட்டு இருக்கலாம், உங்களுக்கு ஒரு காரியத்தை குறித்து வாக்கு கொடுத்து விட்டு அதை செய்யாமல் இருக்கலாம் ஆனால் உங்களை சிருஷ்டித்த தேவன் உங்களை மறக்கவே இல்லை, உங்களை கைவிடமாட்டார்.நீங்க செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் தேவன் இயேசு மீது உங்களுடைய விசுவாசத்தை , நம்பிக்கையை வைத்து பொறுமையுடன் அவருக்காக காத்து இருப்பது தான், நிச்சயமாய்

For the love of money is the root of all evil

The Bible says that, For the love of money is the root of all evil ( 1 Timo 6:10 ).Money is very essential to one’s life.But you shouldn’t be greedy.You should be satisfied with the money you have.Some people are not satisfied with the money they have, they are greedy for more.That’s very wrong.That’s why Scripture says that love of money is the root of all evil.Therefore, obey the word of God and be content with the money you have.Put your faith in God ,he will meet your family needs.God Jesus will bless you and your family.Bro.Sanjeev Vivekanandarajah.

பண ஆசை எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது

வேதம் சொல்லுகிறது , பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது (1 தீமோ 6 :10 ). பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது தான்.ஆனால் பணத்தின் மீது உங்களுக்கு ஆசை வரக்கூடாது .நீங்கள் உங்களுக்கு இருக்கிற பணத்தில் திருப்தியாக இருக்க வேண்டும். சிலர் இருக்கிற பணத்தில் திருப்த்தியாக இருக்க மாடடார்கள், இன்னும் அதிகமாய் வேண்டும் என்று பேராசை படுவார்கள்.அது மிகவும் தவறு. இருக்கிற பணத்தில் திருப்தி பட வேண்டும்.அதனால் தான் வேதம் சொல்லுகிறது பண ஆசை எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது என்று.ஆகவே வேத வசனத்திற்கு கீழ்ப்படிந்து பணத்தின் மீது ஆசை படாமல் , இருக்கிற பணத்தில் திருப்தியாக இருங்கள்.தேவன் உங்கள் குடும்ப தேவைகளை சந்திப்பார்.அவர் மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள்.தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

Jesus is the God who turns evil into good

The Bible says that , all things work together for good to those who love God (Romans 8:28).For those who love God, whatever happens in their life it will be good.It’s not only that God created you as man but for your sins, your iniquities, your transgressions he died on the cross and rose on the third day and showed his love.And for those who love that loving God all things are happening good in their life.In the Bible we read of a young man named Joseph, When his master’s wife urged him to lie down with her,Joseph said , how can I sin against God? and ran away from his master’s house, because  Joseph was faithful to his master and he loved God. Therefore ,God turned all the evil things that had come into Joseph’s life for good and exalted him to prime minister in the foreign land in which he lived.Like Joseph, when you do what pleases God and love him, God is faithful to exalt you in your life by turning the evil into good. Hallelujah ! May God bless you and your family. Bro. Sanje

தீமைகளை நன்மைகளாக மாற்றும் தேவன் இயேசு

வேதம் சொல்லுகிறது , தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று (ரோமன் 8 :28 ) தேவன் மீது அன்பு செலுத்துகிறவர்களுக்கு  வாழ்க்கையில் எது நடந்தாலும் அது நன்மையாகவே நடக்கும். தேவன் உங்களை மனிதனாக சிருஷ்டித்தது மாத்திரம் அல்ல , உங்களுடைய பாவங்களுக்காக , உங்களுடைய அக்கிரமங்களுக்காக ,உங்களுடைய மீறுதலுக்காக  கல்வாரி சிலுவையில் மரித்து ,மூன்றாம் நாள் உயிரோட எழும்பி அவர் தன்னுடைய  அன்பை வெளிபடுத்தினார்.அந்த அன்புள்ள தேவனை யார் யார் எல்லாம் நேசிக்கிறார்களோ அவர்களுக்கு  வாழ்க்கையில் எல்லாமே  நன்மையாகவே நடக்கும். வேத புத்தகத்தில் ஜோசப் என்ற ஒரு வாலிபனை குறித்து வாசிக்கின்றோம், அவனுடைய  எஜமானின் மனைவி  தன்னுடன் சயனிக்குமாறு அவனை கடடாய படுத்தின போது, நான் என் தேவனுக்கு விரோதமாய் எப்படி பாவம் செய்வது என்று சொல்லி அந்த வீடடை விடடே ஓடி போனான். காரணம் ஜோசப் தன்னுடைய எஜமானுக்கு உண்மையாக இருந்தபடியாலும் , தேவனை நேசித்த படியாலும் அவன் அந்த பாவத்தை தேவனுக்கு விரோதமாகவும் தன்னுடைய எஜமானுக்கு விரோதமாகவும் செய்யவில்லை.அதனால் தேவன் ஜோசபின் வாழ்க்கையில்  வந்த எல்லா தீமையான காரி

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்(பிலி4:19).வேதவசனம் ஒரு போதும் பொய்யாகாது.தேவன் இயேசு மீது உங்களுடைய நம்பிக்கையை வைக்கும் போது உங்களுடைய குறைவை எல்லாம் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின் படி கிறிஸ்து யேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். உங்களுயை தேவைகளை சந்திக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்.அதனால் ஒன்றையும் குறித்து கவலைபடாதீங்க.இதை நான் அனுபவரீதியாக உணர்ந்து உள்ளேன் , உணர்ந்து கொண்டிருக்கிறேன்.வேத புஸ்தகத்தில் ஒரு சம்பவம் எழுதப்படிருக்கு, இயேசு பூமியில் வாழ்ந்த நாட்களில் கானாவூரில் நடந்த ஒரு கல்யாணத்துக்கு அவரை அழைத்து இருந்திருந்தார்கள், அங்கே கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு திராச்சைரசம்  அருந்த பரிமாறப்பட்ட்து , ஆனால் அவர்கள் எதிர்பார்க்க வில்லை திராச்சைரசத்தில் குறைவு வரும் என்று, இயேசுவும் அங்கே இருந்த படியால் அவருக்கு திராச்சை ரசம் குறைவாக இருப்பதை குறித்து சொன்ன போது இயேசு தண்ணீரை திராச்சை ரசமாக மாற்றி கல்யாண வீட்டில் இருந்த குறைவை நீக்கினார்.அதே போல உங்கள் வாழ்க்கையிலும் ஏதாவது தேவை அல்லது குறைவு இருக்குமான

Jesus is the God who meets your needs

My God shall supply all your need according to his riches in glory by Christ Jesus (Phi 4:19) The word of God never lies,. When you put your trust in God he shall supply all your need according to his riches in glory by Christ Jesus.God is faithful to meet all your needs. Therefore , don’t worry about anything.I have experienced this in my life.There has been an incident in the Bible where Jesus had been invited for a wedding in the city of Cana, there wine ( grape juice ) was given to everyone to drink and they din’t expect there will be shortage of wine , and when it was said to Jesus, He (Jesus) turned the water in to wine and supplied the need of the wedding house.Like that , if you too have any need or anything lack in your life, just keep your faith in Jesus and let him know about that.He will definitely supply all your needs just as he did in the wedding house in Cana.May God Jesus bless you and your family. Bro.Sanjeev Vivekanandarajah.

Do you want to go to heaven?

Jesus : I am the way, the truth, and the life. No one comes to the Father except through Me ( John 14:6) Dear beloved , Do you want to go to heaven ? The answer will be yes, and I hop you are no exception.Just to go to Heaven these days,some people do charitable donations and seek forgiveness for their sins,some others go to the holy places and seek forgiveness for   their sins and some others sacrifice animals and birds in the temples to atone for their sins.Charitable work is good to do ,but your charitable donations will never take you to heaven.Then, do You think how to get to heaven? Put your trust and faith in Jesus, he is the way, the truth and the life, Jesus is the only way to go to heaven.No sacrifice is required because We have a loving god in Jesus, who has paid the price for the sin of mankind by shedding his holy blood on the cross of Calvary.Therefore there is no need for you to pay any sacrifice for your sins. Instead, you keep your faith in Jesus and accept him as yo

பரலோகம் செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14 :6 ) நீங்கள் பரலோகம் செல்ல வேண்டும் என்று விரும்புகிறீங்களா? ஆம் எல்லாருக்கும் பரலோகம் செல்ல வேண்டும் என்ற விருப்பம், ஆசை இருக்கத்தான் செய்கிறது. நீங்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்று நினைகிறேன்.இன்று ஜனங்கள் பரலோகம் செல்ல வேண்டும் என்பதட்க்காக தான தருமங்களை செய்கிறார்கள் , இன்னும் சிலர் தங்களுடைய பாவங்களுக்கு விமோசனம் தேடி  புனித ஸ்தலங்கள் புனித ஸ்தலங்களாக ஏறி இறங்குகிறார்கள், இன்னும் சிலர் தங்களுடைய பாவம் நிவர்த்தி செய்யும் படி மிருகங்களை, பறவைகளை கோவில்களுக்கு சென்று பலி கொடுக்கிறார்கள் ஆனால் இவற்றை எல்லாம் நீங்கள் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அதட்க்காக தான தர்மங்கள் செய்வது பிழை என்றோ , செய்ய வேண்டாம் என்றோ  சொல்லவில்லை. செய்வது நல்லது தான், ஆனால் உங்களுடைய தான தர்மங்கள், உங்களுடைய நட்கிரிகைகள்  உங்களை ஒரு போதும் பரலோகத்துக்கு உங்களை எடுத்து  செல்லாது.அப்படி என்றால் எப்படி பரலோகம்  செல்வது என்று நினைக்கிறீங்களா? இயேசு மீது உங்களுடைய நம்பிக்கையை, விசுவாசத்தை வையுங்கள்.

Try to be at peace with others

The Bible says that , If it is possible, as much as depends on you, live peaceably with all  ( Rom 12:18 ) Dear beloved, Even if this seems impossible to you, God does not ask you to do something you cannot do, nor does he expects something that is impossible for you.God says that , as much as you can, live peaceably with all men.God created humans and placed them on earth with the intention that all people should live in peace.The days you live on earth are very little and the coming of God Jesus is very near,Therefore,If you have a difference of opinion with someone , find out the things that make peace and try to reconcile with them.Hallelujah ! May God Jesus bless you and your family. Bro.Sanjeev Vivekanandarajah.

சமாதானமாய் மற்றவர்களுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்

வேதம் சொல்லுகிறது , கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள் என்று ( ரோமர் 12:18 ) பிரியமானவர்களே, ஒருவேளை உங்களுக்கு இது முடியாத காரியம் போல் தோன்றினாலும் தேவன் உங்களால் முடியாத காரியத்தை அவர் உங்களிடம் கேட்க்கிறதும்  இல்லை, முடியாத ஒன்றை உங்களிடம் அவர் எதிர் பார்க்கிறதும் இல்லை.தேவன் சொல்லுகிறார் உங்களால் ஆனமட்டும் அதாவது உங்களால் முடிந்த அளவு நீங்கள் எல்லா மனுஷரோடும் சமாதானமாய் இருக்க வேண்டும் என்று, எல்லா மனிதர்களும் சமாதானமாய் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தேவன் மனிதர்களை சிருஷ்ட்டித்து  பூலோகத்தில் வைத்து இருக்கிறார்.பூலோகத்தில் நீங்கள் வாழும் நாட்கள் மிகவும் கொஞ்சம் , தேவன்இயேசுவின் வருகை மிகவும் சமீபமாய் இருக்கிறது ஆதலால்  உங்களுக்கு யாருடனாவது கருத்து வேறுபாடு இருக்குமானால் சமாதானத்தை உண்டு பண்ணும் காரியங்களை ஆராய்ந்து பார்த்து அவர்களுடன் ஒப்புரவாகி சமாதானத்தை கடட முயற்சி செய்யுங்கள். அல்லேலூயா !  தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக. சகோ.சஞ்ஜீவ் விவேகானந்தராஜா

Forgiving Heart

The word of God says that ,Do not say, “I’ll do to him as he has done to me; I’ll pay him back for what he  did.”( Pro 24:29) Therefore , dear beloved, if someone has done you harm or things against you, don’t say that , I will do to him as he has done to me , I’ll pay him back for what he did.Let me remind you that,When the Lord Jesus Christ was crucified on Calvary, he did not say that, I would do to them what they had done to me, nor would I repay them for what they had done.Instead he said to Father ‘ father forgive them, that they do not know what they are doing ‘.Therefore, We too should forgive the people who have done wrong to us and start loving them.When you do that, the heart of God will surely be pleased.May the Lord Jesus Christ bless you and your family.Bro.Sanjeev Vivekanandarajah.

மன்னிக்கும் இருதயம்

தேவனுடைய வசனம் சொல்லுகிறது ,அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே (நீதி 24:29) ஆகவே பிரியமானவர்களே, யாராவது உங்களுக்கு தீங்குஅல்லது உங்களுக்குவிரோதமாய் காரியங்களை செய்திருந்தால் நீங்கள் அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும்அவனுக்குச் சரிக்கட்டுவேன்என்று நீங்கள் சொல்லாமல்,உங்களுடைய இருதயத்தில் இருந்து பழிவாங்கும் எண்ணத்தை அகற்றி விட்டு அந்த நபரை அல்லது நபர்களை மன்னித்து அவர்களை நேசிக்க வேண்டும். ஆண்டவராகிய இயேசுவை  கல்வாரி சிலுவையில் அறைந்த போது கூட பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று கூறினார்.அவன் எனக்கு செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன் அவன் செய்த செய்கைக்கு தக்கதாக நானும் அவனுக்கு சரிகட்டுவேன் என்று கூறவில்லை மாறாக அவர்களை மன்னித்தார்.ஆகவே நாங்களும் ஆண்டவர்இயேசு மன்னித்தது போல நமக்கு தீமை செய்தவர்களை நாமும் மன்னித்து அவர்களை நேசிக்க கற்று கொள்ளுவோம். அப்படி நீங்கள் செய்

சூறாவளி போன்றதான பிரச்சனையும் இயேசுவும் Hurricane - like problem and Jesus

பரிசுத்த வேதாகமத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கு , அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக அலைகள் அதின்மேல் மோதிற்று கப்பலின்  பின்னணியத்தில் இயேசு தலையணையை வைத்து  நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்கவலையில்லையா என்றார்கள் இயேசு எழுந்து ,காற்றை அதட்டி, கடலைப் பார்த்து இரையாதே, அமைதலாயிருஎன்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று (மாற்கு 4:37- 39 ) பரலோக தேவன் இயேசு தனக்கு பரலோகத்தில் இருந்த அத்தனை மகிமை களையும்  விட்டு விட்டு மனித குலத்தின் பாவங்களுக்கு  விமோசனம்  கொடுக்கும் படி இந்த பூலோகத்தில் சாதாரண மானிடனாக பிறந்தார்.அவர் அப்படி பூலோகத்தில் வாழ்ந்த  நாட்களில் ஒரு நாள் அவர் தன் சீடர்களோடு படகில் சென்று கொண்டிருந்த போது பலத்த புயல் காற்று உண்டாகின போது சீடர்கள் புயல் காற்றை பார்த்து பயந்து படகில் நித்திரை செய்து கொண்டிருந்த இயேசுவை எழுப்பி  ஐயா நாங்கள் மடிந்து போவது உமக்கு கவலை இல்லையா என்று கேடட போது இயேசு எழும்பி காற்றை அதட்டி கடலை பார்த்து இரையாதே அமைதலாய் இரு என்ற போது காற்றும், கடலும் யேச

தேவனை எக்காலத்திலும் நம்புங்கள் Trust in God at all times

வேதம் சொல்லுகிறது , எக்காலத்திலும் தேவனை(கடவுளை)நம்புங்கள்(சங்கீதம் 62 :8 ) எக்காலம் என்பது எல்லா காலத்திலும் அல்லது எல்லா சூழ்நிலையிலும் என்று அர்த்தம், அது ஒரு வேளை உங்களுடைய சந்தோஷ  நாட்களாய் இருக்கலாம், அல்லது உங்களுடைய துக்க நாட்களாய் இருக்கலாம், எப்படி படட காலமாய்இருந்தாலும் சரி எக்காலத்திலும் , எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை நம்ப வேண்டும் என்று வேதம் சொல்லுகின்றது.வேத புஸ்தகத்தில் யோபு என்னும் ஒரு மனிதனை குறித்து எழுதபட்டிருக்கு , அவன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகிறவனாகவும் இருந்தான், அதுமாத்திரம் அல்ல , அவன் மிகுந்த செல்வந்தனாக,அநேக மிருக ஜீவன்களை கொண்டவனாக மிகவும் சந்தோஷமாக தன்னுடைய மனைவி மற்றும்பிள்ளைகளோடு வாழ்ந்து கொண்டிருந்தான் என்று.ஆனால் ஒரு நாள் அவன் தன்னுடைய பிள்ளைகள் , மற்றும் அவனுக்கு இருந்த சொத்துக்கள் எல்லாவற்றயும் இழந்து மிகவும் ஒரு துக்கமான, சோகமான நிலைக்குள் போக வேண்டியதாய் இருந்தது. ஆனால் அவன் எப்படி தன்னுடைய சந்தோஷ நாட்களில் தேவன் மீது  நம்பிக்கை வைத்து இருந்தானோ அதே போலத்தான் தன்னுடைய துயர ,துக்க நாட்களிலும் தேவன் மீது நம்பிக்

நெடுநாளாய் காத்திருப்பதன் நன்மை The benefits of long waiting

தேவனுடைய வசனம் சொல்லுகிறது ,நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.  (நீதிமொழிகள் 13 :12 ) ஆம் பிரியமானவர்களே நீங்கள் நெடு நாளாய் காத்து இருக்கிறீங்களா ? எப்போது கிடைக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறீங்களா? நீங்கள் நெடுங்காலமாய் காத்திருக்கிறீர்கள் என்பதை தேவன் அறிவார். கவலை பட வேண்டாம் எவ்வளவு காலம் காத்திருப்பது என சோர்ந்து போகாதீர்கள், தேவன் மீது வைத்திருக்கிற விசுவாசத்தை இழந்து விடாதீங்க.தேவன் மீது தொடர்ந்து உங்களுடைய  நம்பிக்கையையும் , விசுவாசத்தையும் வையுங்கள்.அப்படி நீங்கள் காத்திருக்கும்  நாட்களில் உங்களுடைய எதிராளியான பிசாசுக்கு நீங்கள் இடம் கொடுப்பீர்களானால் அவன் உங்களை தேவனை  விட்டு பிரித்து விடுவான். ஆகவே நீங்கள் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும்.நிச்சயமாக உங்களது ஜெபத்திற்கும் கண்ணீருக்கும், கிரியைக்கும் ஏற்ற காலம் வரும்போது, அத்தனை பலனையும் தேவன் காண செய்வார். அவர் ஏற்ற  வேளையில் கொடுக்கும்போது நிச்சயமாகவே அது உங்களுக்கு ஜீவ விருட்சத்தை போல நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். அல்லேலூயா! தேவன் இய

பயப்படாதே , நான் உன்னோடு இருக்கிறேன் Fear not ,I am with you

தேவனுடைய வசனம் சொல்லுகிறது , நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்று ( ஏசாயா 41 : 10 ) கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜனங்கள் சிறையிருப்பில் இருக்கும் போது துன்பங்களையும் , வேதனைகளையும் அனுபவித்து கொண்டிருந்த போது அவர்களை உட்சாகபடுத்தும் விதமாக அவர்களுக்கு ஆதரவாக இந்த வசனத்தின் ஊடாக பேசுகிறார்.இன்றைக்கு யார் யாரெல்லாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை ஆண்டவராக தங்களுடைய வாழ்க்கையில் ஏற்று கொண்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லாருக்கும் இந்த வார்த்தை பொருந்தும்.எவ்வளவு அழகான , ஆறுதலான வார்த்தை.உங்களை மானிடனாக சிருஷ்டித்த உங்கள் ஆண்டவர் உங்களை பார்த்து சொல்லுகிறார் , நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்று, எவ்வளவு ஆறுதலான வார்த்தை.நானும் என் மனைவியும் இஸ்ரவேல் ஜனங்களை போல் வாழ்க்கையில் ஒரு நெருக்கமான சூழ்நிலைகூடாக கடந்து செ

God who gives strength and power

God gives strength to the weak,And to those who have no might He increases power.(Isaiah 40:29) Yes beloved , when sufferings,struggles, tribulations, reproaches, insults come in the life we are tired of bearing down on without strength and power. But the word of God says that , God gives strength to the weak,And to those who have no might he increases power. Therefore, when you are weak, there is a God to help you, He is the One who created you, Jesus Christ.And God is so faithful when you ask him for the strength and power you need to endure situations and with that he will help you to shall mount up with wings as eagles. May the Lord Jesus Christ bless you and your family.

பெலத்தையும், சக்தியையும் தரும் தேவன்

தேவனுடைய வசனம் சொல்லுகிறது, சோர்ந்துபோகிறவனுக்கு தேவன் பெலன்  கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்று (ஏசாயா 40 :29) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். ஆம்  பிரியமானவர்களே, வாழ்க்கையில் பாடுகள், போராட்டங்கள், உபத்திரவங்கள், நிந்தைகள், அவமானங்கள் வரும் போது நாம் அவற்றை தாங்கி கொள்ளுவதுக்கு பெலன் ,சத்துவம் இல்லாமல் சோர்ந்து பெலனற்று போகிறோம்,ஆனால் வேத வசனம் சொல்லுகிறது , தேவன் சோர்ந்துபோகிறவனுக்கு பெலன்  கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்று. அல்லேலூயா !  ஆகவே இப்படி நீங்கள் பெலனற்று போகும் போது உங்களுக்கு உதவி செய்ய ஒரு தேவன் உண்டு அவர்தான் உங்களை சிருஷ்டித்த இயேசு கிறிஸ்து.அவரிடம் நீங்கள் சூழ்நிலைகளை தாங்கி கொள்ள தேவையான பெலத்தையும் , சத்துவத்துவதையும் கேட்க்கும் போது அவற்றை கொடுக்க தேவன் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அது மாத்திரம் மாத்திரம் அல்ல