ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை (சங் 38:9) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது பாடுகளுக்கூடாய் கடந்து சென்ற போது அவர் கர்த்தருடைய சமூகத்தில் தன்னுடைய பாரங்களை விசுவாசத்தோடு இறக்கி வைக்கிறார். அவர் சொல்லுகிறார் “ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை” என்று. அல்லேலூயா ! ஆம் பிரியமானவர்களே, கர்த்தருக்கு மறைவானது என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை, சகலதும் அவருக்கு முன்பாக நிர்வாணமாய் இருக்கின்றது, இங்கே தாவீதின் தவிர்ப்பும், அவருடைய தேவைகளும் கர்த்தருக்கு மறைவாயிருக்கவில்லை, கர்த்தர் சகலத்தையும் அறிந்திருந்தார், தாவீதுக்கு எதை எப்போது கொடுக்க வேண்டும் என்பதையும் கர்த்தர் அறிந்திருந்தார். அல்லேலூயா ! பிரியமானவர்களே, நீங்களும் தாவீதை போல் உங்களுடைய அங...