Posts

The Lord will give what is good, and the land will yield its fruits

The Lord will give what is good, and our land will yield its increase (Ps 85:12).

கர்த்தர் நன்மையானதைத் தருவார், தேசமும் தன் பலனைக் கொடுக்கும்

கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும் ( சங் 85 : 12 ).ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். நீங்கள் வெகு நாட்களாய் நன்மையை எதிர் பார்த்து கிடைக்காத பட்ச்சத்தில் சோர்ந்து போய் இருக்கலாம். ஆனால் நான் நன்மையானதை உனக்குத் தருவேன்,நீ வாழுகின்ற இந்த தேசமும் தன் பலனைக் கொடுக்கும் என்று உனக்கு வாக்குக் கொடுத்த தேவன் தனது வாக்கு தத்ததில் உண்மை உள்ளவராக இருக்கிறார், நன்மை செய்வது தேவனின் குணாதிசயங்களில் ஒன்று, அவருக்கு தெரியும் எப்போது எந்த நன்மையை உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று, அவருடைய வேளை வரும் போது தேவனிடம் இருந்து அந்த நன்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளுவீர்கள்.தேசம் ஆசிர்வதிக்க படுவதட்கும், தேசம் தன் பலனைக் கொடுப்பதட்கு கர்த்தருடைய கிருபையும், இரக்கமும் தேவை.ஆகவே தேசத்தை ஆட்சி செய்யும் தேசத் தலைவர்களை தேவன் வழிநடத்தும் படியாகவும், தேவனுடைய ஆளுகை தேசத்தில் இருக்கும் படியாகவும், தேசத்தில் தேவனுடை...

The God who crowns the year with his goodness

You crown the year with Your goodness (Ps 65:11).

வருஷத்தை தம்முடைய நன்மையினால் முடி சூட்டும் தேவன்

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர் ( சங் 65 :11 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.தேவன் தாம் சிருஷ்டித்த ஒவ்வொரு மனுஷனுக்கும் ஆயுசு நாட்களை கூட்டிக் கொடுப்பதோடு ஒவ்வொருவருடைய  வருஷத்தையும் அவருடைய நன்மையினாலும் , கிருபையினாலும் முடி சூட்டுகிறார்.நன்மை என்பதற்கு, "நல்ல பங்கு" அல்லது "உயர்ந்த ஈவுகள்" என்பது அர்த்தமாகும்.உங்களுக்குத் தம்முடைய நல்ல ஈவுகளாகிய நன்மைகளைச் சம்பூரணமாக் கொடுக்க தேவன் விரும்புகின்றார். உங்களுடைய இருதயம் எந்த அளவுக்கு சுத்தமாயிருக்கிறதோ, அந்த அளவுக்கு, நீங்கள் தேவனுடைய நன்மையையும், கிருபையையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்றுக் கொள்ளுவீர்கள். தாவீது ராஜாவின் இருதயம் சுத்தமாக இருந்ததினாலும், அவர் தேவனை நேசித்ததாலும் அவருடைய  ஜீவனுள்ள நாளெல்லாம் தேவனுடைய நன்மையும் கிருபையும் அவரைத் தொடர்ந்தது (சங். 23:6). நீங்களும் தாவீதை போல சுத்த இருதயத்தோடு தேவனை நேசிப்பீர்களானால் த...

Give thanks to God in all circumstances

In everything give thanks; for this is the will of God in Christ Jesus for you ( 1 Theso 5:18)

எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள்

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1தெச 5:18).ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் எங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனைத் துதிக்க,அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகின்றார்.உங்களுடைய இருதயமானது கர்த்தரை துதிக்கும் துதிகளாலும், ஸ்தோத்திரத்தாலும் நிரம்பியிருக்கும் போது தேவனைப் பற்றி குறை சொல்ல உங்கள் இருதயத்தில் ஒன்றும் இருக்காது.ஆகவே இன்றையில் இருந்து உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா காரியத்துக்கும் அது ஒரு வேளை சந்தோஷமான காரியமாக இருக்கலாம் அல்லது துக்கமான காரியமாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலு...

The Lord is good, for his mercy endures forever

Give thanks to the Lord, for he is good, For his mercy endures forever (Ps 107:1)

கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது

கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங் 107 :1 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தரே சர்வ சிருஷ்டிக்கும் தேவனாகவும், சர்வலோகத்திட்கும் அதிபதியாகவும் இருக்கிறார்,அவரே எல்லா மனுஷருக்கும் பரலோக பிதாவாகஇருக்கிறார். அவர் மனுபுத்திரர் எல்லாரையும் பராமரித்து வருகிறார்,ஆபத்து வேளைகளில் மனுஷருக்கு அனுகூலமான துணையாய் இருக்கிறார், அவர் மனுஷர்களுடைய தேவைகளை சந்தித்து வருகிறார், வியாதிகளை நீக்கி அவர்களுக்கு சுகத்தைக் கொடுக்கிறார், ஆற்றி தேற்றி அரவணைக்கிறார் மற்றும் ஒவ்வொருவருடைய   ஜெபத்துக்க்கும் பதில் கொடுத்து வருகிறார்.அவர் நம்முடைய வாழ்க்கையில் நல்லவராகவே இருக்கிறார், அவருடைய இரக்கம், கிருபை, அன்பே நம்மை இன்று வாழ வைக்கின்றது.அவரே மனுபுத்திரர்களின் பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக, மீறுதலுக்காக அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து மனுஷ குலத்தை மீட்டு எ...

The battle belongs to the Lord

Thus says the Lord to you: ‘Do not be afraid nor dismayed because of this great multitude, for the battle is not yours, but God’s (2 Chro 2:15).

யுத்தம் கர்த்தருடையது

நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது (2 நாளா 20 :15 ).ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.’ நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்’ என்று வேதம் சொல்லுகிறது.ஆம் பிரியமானவர்களே, உங்களுடைய பிரச்சனையைப் பார்த்து பயந்து, எப்படி அந்த நிறுவனத்தில் இருந்து, அந்த அதிகாரிகளிடம் இருந்து நான் அந்த ஆவணத்தை பெற்றுக்கொள்ள போகிறேன், எப்படி இந்த பிரச்சனையில் இருந்து நான் வெளியே  வரப்போகிறேன் என்று பயந்து நடுங்கி கலங்கி போய் இருக்கிறீங்களா? கவலை படாதிருங்கள். உங்களுடைய பிரச்சனையைப் பார்க்கிலும் உங்களை சிருஷ்டித்த தேவன் பெரியவர், உங்களுடய பிரச்சனையில் இருந்து உங்களை விடுதலை செய்ய அவரால் முடியும், ஆகவே பிரச்சனையில் இருந்து உங்களை விடுதலை செய்யும் உங்களை மானிடனாக சிருஷ்டித்த தேவனை நோக்கி பாரு...

Success shall come from the Lord

The lot is cast into the lap,but its every decision is from the Lord (Pro 16:33).

காரியசித்தியோ கர்த்தரால் வரும்

சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும் (நீதி 16:33).ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.நீங்கள் ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் உங்களுடைய வாழ்க்கையில் நடை பெரும் எந்த காரியங்களும் ராசிகளின் அடிப்படையிலோ, விதியின் அடிப்படையிலோ நடை பெறுவதில்லை மாறாக உங்களுடைய வாழ்க்கையில் நடைபெறும் சகல காரியங்களும் தேவனுடைய சித்தத்தின் பிரகாரமாகவே  நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தேவனுடைய சீட்டு உங்களுடைய மடியிலே போடப்படும் ஆகவே தேவனுடைய சித்தம் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேறும் படியாக நீங்கள் ஜெபிக்க வேண்டும், உங்களுடைய சித்தத்துக்கு ஏற்ற பிரகாரம் தேவன் தம்முடைய சித்தத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கக் கூடாது.சிலர் நினைப்பது தங்களுடைய சுய பலத்தினால், தங்களுடைய சுய முயற்சியினால் , தங்களுடைய சுய ஞானத்தினால் காரியத்தை சித்திக்க முடியும் என்று, ஆனால் வேதம் சொல்லுகிறது ‘காரியசித்தியோ கர...

உத்தமனனும், மாறுபாடுள்ள இருதயமுள்ள மனிதனும்

உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான் (நீதி 28 : 18). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.உத்தமனனாய் நடக்கிறவன், மாறுபாடான மனமுள்ளவன் என்று இரண்டு விதமான நபர்களைக் குறித்து வாசிக்கின்றோம்.முதலில் மாறுபாடான இருதயமுள்ள மனிதனைக் குறித்து தியானிப்போம், மாறுபாடான மனமுள்ளவன் இரு வழிகளில் நடக்கிறவனாய் இருக்கிறான், இவனிடத்தில் உண்மையும், நேர்மையும் இருக்காது,இவன் மாய்மாலமுள்ளவனாய் இருப்பான், அதாவது வெளிவேஷம் போட்டு மற்றவர்களை ஏமாற்றுகிறவன், அவனுக்குள் தெளிந்த சிந்தனை இருக்காது, எப்போதும் குழப்பமடைந்த நிலையில் காணப்படுவான், அவனால் எந்த வழி நல்ல வழி என்பதை இனம் கண்டு கொள்ள முடியாதவனாய் இருப்பதினால் எல்லா வழிகளிலும் செல்வான்,இவனோடு கர்த்தர் இல்லாததினால் அவருடைய பாதுகாப்பும் இவனுக்கு இருக்காது, முடிவில் எங்கோ ஒரு படு குழியில் விழுந்து தன்னுடைய வாழ்க்கையை தானே அழித்துக் கொ...

A man of upright and a man of unrighteousness

Whoever walks blamelessly will be saved, but he who is perverse in his ways will suddenly fall (Pro 28:18)

The God who keeps you in perfect peace

You will keep him in perfect peace, whose  mind is stayed on You, because he trusts in You (Isa 26:3).

பூரண சமாதானத்தினால் காத்துக் கொள்ளும் தேவன்

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்(ஏசா26:3 ) ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே!  நீங்கள் இருக்கின்ற  சூழ்நிலைகளில் கர்த்தரை நம்புவதட்கு உங்களுக்கு ஒன்றும் இல்லாவிடடாலும், அவருடைய  கிருபை, இரக்கம், பாதுகாப்பு, பராமரிப்பை குறித்த நிச்சயம் உங்களிடம் இருந்து எல்லா சூநிலைகளிலும் அவரையே சார்ந்து அவரை உறுதியாய் பற்றிக் கொண்டு வாழ்வீர்களானால் கர்த்தர் உங்களை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்ள உண்மையுள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

The world through earthly wisdom don’t know God

The world through earthly wisdom don’t know God ( 1 Corin 1:21 ).

உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கிறது ”

“உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கிறது”(Iகொரிந்தியர் 1:21). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். இன்று உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கிறது, மறுதலிக்கின்றது, இவர்கள்  தங்களுடைய ஞானத்தைக் குறித்து பெருமை படுகிறார்கள், விஞான வளர்ச்சியை குறித்து மேன்மை பாராட்டுகிறார்கள்.ஆனால் இவர்களுடைய உலக ஜானத்தினால் தேவனை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இவர்களுடைய ஞானம் மாயையானது.தங்களை சிருஷ்டித்த தேவனை தங்களுடைய  ஞானத்தினால் அறிய முடியாமல் இருக்கிறார்கள்.சிலுவையைப்பற்றிய உபதேசம் இவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது, தேவன் தாமே இவர்களுடைய மனக்கண்ணை திறப்பாராக.அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

தேவனுடைய அறிவு அளவில்லாதது

நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது (சங் 147:5). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய மகத்துவத்தைக் குறித்து இங்கே நாம் வாசிக்கின்றோம். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவராய் இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது என்று வேதம் சொல்லுகின்றது. ஆம் பிரியமானவர்களே , தேவன் சர்வஞானமுள்ளவர், அவருடைய அறிவின் ஆழத்தை மனுஷனால் காணவும் முடியாது ,அறிந்து கொள்ளவும் முடியாது, அவர் அவ்வளவு பெரியவராய் இருக்கிறார்.எரேமியா10 ம் அதிகாரம் 12 ம் வசனத்தில் நாம் வாசிக்கின்றோம் ‘ தேவன் பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார் ‘ என்று. வானத்தை தம்முடைய அறிவினால் விரித்தவருடைய ஞானத்தின் ஆழத்தை , அறிவின் ஆழத்தை எந்த மனுஷனாலும் காண  முடியாது, அவருடைய அறிவோ அளவில்லாதது. தேவன் அவ்வளளவு பெரியவராகவு...

God's understanding is infinite

Great is our Lord, and mighty in power, his understanding is infinite  (Ps 147:5).