Posts

கர்த்தருடைய கிருபை

அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா (சங் 117 :2 ) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் நம்மேல் வைத்திருக்கிற கிருபை பெரியதாகவும், அவருடைய உண்மை என்றென்றைக்குமுள்ளதாகவும் இருக்கின்றது. அல்லேலூயா !  ஆகவே பிரியமானவர்களே, சங்கீதக்காரனைப் போல் நாமும் நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரை எப்போதும் அவருடைய கிருபைக்காகவும், அவருடைய இரக்கங்களுக்காகவும், அன்புக்காகவும், அவருடைய தயாவுக்காகவும், அவருடைய உண்மைக்காகவும் துதிக்க வேண்டும், அல்லேலூயா !  பிரியமானவர்களே,  அவ்வாறு தேவனை துதிக்கும் போது நம்முடைய வாழ்க்கை தேவனுடைய பிரசன்னத்தினால் நிரம்பியிருக்கும், அவ்வாறு நம்முடைய வாழ்க்கை தேவ பிரசன்னத்தினால் நிரம்பியிருக்கும் போது வாழ்க்கையில் ஆரோக்கியமும்,  சமாதானமும், நிம்மதியும், சதோஷமும் இருக்கும். அல்லேலூயா !  தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உ...

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் (கலா 6:7) அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான் (நீதி 22:8 ) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, சிலர் வாழ்க்கையில் அதிக ஐசுவரியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதட்க்காக அநியாயத்தை செய்து அநீதியான முறையில் பணத்தை சம்பாதித்துக் கொள்ளுகிறார்கள், அது கர்த்தருடைய பார்வையில் பாவமானதாக இருக்கின்றது. அப்படி அவர்கள் சம்பாதித்துக் கொள்ளும் ஐசுவரியமானது அவர்களது வாழ்க்கையில் நிலைத்திருக்காது. பிரியமானவர்களே,  வேதம் சொல்லுகிறது  “மனுஷன் எதை அவனுடைய வாழ்க்கையில் விதைக்கின்றானோ அதையே அறுப்பான்” என்று. அவன் அநியாயத்தை வாழ்க்கையில் விதைத்தால் வருத்தத்தையே அறுப்பான்.  ஆகவே பிரியமானவர்களே, வாழ்க்கையில் நீங்கள் அநீதியை விதைக்கிறதை விட்டு விட்டு  நீதியை விதைத்து வாழ்க்கையில் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் அறுத்துக் கொள்ளுங்கள். அல்லேலூயா !  தேவன் இ...

தேவன் நித்தியமானவர்

பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர் (சங் 90:2) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, மனுஷர்களாகிய நாம் நித்யமானவர்களல்ல, அநித்யமானவர்கள், மனுஷர்களாகிய நமக்கு சரீர மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது, நாங்கள் ஒருநாள் மரிக்க வேண்டியவர்கள்.  ஆனால் பிரியமானவர்களே, ஆம் ஆராதிக்கின்ற, நம் ஒவ்வொருவரையும் சிருஷ்டித்த நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து நித்தியமானவர், அவர் நித்திய காலமாக இருக்கிறவர், அவர் “பர்வதங்கள் தோன்றுமுன்னும், அவர்  பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், அவர் அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறார், அவரே அல்பாவும், ஓமெக்காவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறார். அல்லேலூயா !  ஆகவே பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் நித்தியகாலமாய் அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிற படி...

தேவனுடைய சித்தத்தின் படியாய் ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்கு செவி கொடுக்கும் தேவன்

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (சங் 66:18-20) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, நம்முடைய இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருப்போமானால் ஆண்டவர் நம்முடைய ஜெபத்துக்கு பதில் கொடுக்க மாட்டார்.  பிரியமானவர்களே, இங்கே சங்கீதக்காரன் சொல்லுகிறார் “ மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக” என்று. அல்லேலூயா !  பிரியமானவர்களே, நாம் தேவனுடைய சமூகத்தில் ஜெபிக்கும் போது நம்முடைய சுய சித்தம் நிறைவேற வேண்டும் என்று நினைத்து, நம்முடைய சுய சித்தத்திற்கு ...

கர்த்தருடைய ஆவினாலே எல்லாம் ஆகும்

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சக 4:6) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, செருபாபேல் தலைமையில் பாபிலோன் சிறையியிருப்பில் இருந்து திரும்பி வந்த ஜனங்கள் அவருடைய தலைமையில் தேவனுடைய ஆலயத்தை கட்ட  ஆரம்பித்தார்கள் அப்போது அவர்களுக்கு ஆலயத்தைக் கட்டுமான வேலைகளுக்கு தடைகளும், எதிருப்புக்களும் வந்தது, அப்போது செருபாபேல் சோர்ந்து போய் விடுகிறார், எங்கோ தங்களால் ஆலயத்தைக்  கட்டி முடிக்காமல் போய் விடுமோ என்கிறதான சந்தேகமும், பயமும் அவருக்கு வந்தது, அவர் கர்த்தரையும், அவருடைய வல்லமையையும் மறந்து போய் விடுகிறார், இந்த சூழ்நிலையில் தான் கர்த்தர் சொல்லுகிறார் “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று கூறி அவரை உட்ச்சாகப்படுத்துகிறார். அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய ஊழியத்தை ...

இடறல்களை வழியிலிருந்து எடுத்துப் போடும் தேவன் (UK eased more lockdown restrictions - Day 123)

வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும் (ஏசா 57:14 ) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் பாடுகளும், உபத்திரவங்களும் நிச்சயம் உண்டு, ஆனால் பிரியமானவர்களே, நல்ல செய்தி என்னெவென்றால் நம்மை சிருஷ்டித்தவரும், நம்முடைய ஆண்டவரும், நம்முடைய இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்து அவரை நம்புகிற அவருடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலிலும், நம்முடைய வழிகளிலும் நாம் சமாதானமாகவும், ஆறுதலாகவும் இந்த பூலோகத்தில் ஜீவிப்பதுக்கு தடையாக இருக்கும் ஒவ்வொரு தடைகளையும், ஒவ்வொரு இடறல்களையும் நீக்கிப் போட்டு, அவர் தம்முடைய கிருபையினால் நம் ஒவ்வொருவருவருடைய வாழ்க்கையிலும் இருக்கும் நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் அதினதின் நாட்களில் சந்தித்து அவர் நம் ஒவ்வொருவரையும் இந...

The Lord is fighting for you (UK eased more lockdown restrictions - Day 122)

For the LORD your God is He who is fighting for you, just as He promised you.

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுகிறார் (UK eased more lockdown restrictions - Day 122)

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார் (யோசு 23:10) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, உங்களுக்கு விரோதமாக இருக்கும் உங்களுடைய சூழ்நிலையைப் பார்த்து பயப்படுகிறீர்களா? பயப்பட வேண்டாம் கர்த்தரை நம்புங்கள், அவர் மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள், அவர் தாமே  உங்களுக்காக யுத்தம் பண்ணி காரியத்தை வாய்க்கப் பண்ணுகிறவர். அல்லேலூயா ! பிரியமானவர்களே, அன்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு தாம் சொல்லியிருந்த வார்த்தையில் கர்த்தர் உண்மையுள்ளவராக இருந்து, அவர்களுடைய எதிரிகளோடு அவர் யுத்தம் பண்ணி அவர்களுக்கு வாழ்க்கையில் ஜெயத்தைக் கொடுத்த கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கும் தான் சொன்ன வார்த்தையில் உண்மையுள்ளவராக இருந்து, உங்களுக்காக உங்களுடைய எதிரிகளோடு வாழ்க்கையில் யுத்தத்தை புரிந்து ஜெயத்தைக் கொடுக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! என்ன யுத்தம் என்று நினைக்கிறீ...

God is so faithful to his words (UK eased more lockdown restrictions - Day 121)

And now, O Lord God, You are God, and Your words are true, and You have promised this goodness to Your servant (2  Sa 7:28)

தேவன் தமது வார்த்தையில் உண்மையுள்ளவராக இருக்கிறார் (UK eased more lockdown restrictions - Day 121)

இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர் (2 சாமூ 7:28) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவன் தம்முடைய  வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராக இருக்கிறார், அவர் எதை உங்களுக்கு வாழ்க்கையில் செய்வேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறாரோ அதை அவர் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றவும் உண்மையுள்ளவராக இருக்கிறார், வாக்கு மறக்க அவர் மனுபுத்திரனல்ல (எண்ணா 23:19). அல்லேலூயா !  ஆகவே பிரியமானவர்களே, உங்களுடைய சூழ்நிலையை பார்த்து இது என்னுடைய வாழ்க்கையில் எங்கே நடக்கப் போகிறது, சாத்தியமே இல்லை என்று நினைத்து சர்வவல்லவரை உங்களுடைய வாழ்க்கையில் மட்டுப்படுத்தி விட வேண்டாம், வேதம் சொல்லுகிறது மனுஷனால் முடியாதது தேவனானால் கூடும் என்று (லூக் 18:27). அல்லேலூயா !  பிரியமானவர்களே, ஆபிரகாம், யாக்கோப்பு, தாவீது மற்...

(UK eased more lockdown restrictions - Day 120)

Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢

(UK eased more lockdown restrictions - Day 120)

தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢

(UK eased more lockdown restrictions - Day 119)

Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢

(UK eased more lockdown restrictions - Day 119)

தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢

(UK eased more lockdown restrictions - Day 118)

Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢

(UK eased more lockdown restrictions - Day 118)

தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢

Who am I, Lord God? And what is my house (UK eased more lockdown restrictions - Day 117)

Then King David went in and sat before the Lord; and he said: “Who am I, O Lord God? And what is my house, that You have brought me this far? (2 Sam 7:18)

நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? (UK eased more lockdown restrictions - Day 117)

அப்பொழுது தாவீது ராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? (2 சாமூ 7:18) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது  ராஜா   கர்த்தருடைய சமூகத்தில் தன்னுடைய விண்ணப்பத்தையும், வேண்டுதல்களையும் ஏறெடுப்பதுக்கு முன்பாக அவர் தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் கர்த்தருடைய சமூகத்தில் “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?” என்று தாழ்த்துகிறார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, தாவீது தேவ சமூகத்தில் ஏறெடுத்த இந்த வார்த்தைகள் மூலமாய் அவர் எப்படிப்பட்ட   குணாதிசயங்களை உடையவராக இருந்தார் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது,  1) தேவன் மீது பிரியமுள்ளவராக இருந்திருக்கிறார்  2 ) மனத் தாழ்மை உள்...

Believe in your heart and confess with your mouth that Jesus Christ is Lord (UK eased more lockdown restrictions - Day 116)

that if you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved (Rom 10:9)

இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று இருதயத்தில் விசுவாசித்து, வாயினால் அறிக்கை செய்யுங்கள் (UK eased more lockdown restrictions - Day 116)

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோம 10:9) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டுமானால் நீங்கள் “இரண்டு” காரியங்களை செய்ய வேண்டுமென்று உங்களுக்கு வேதம் ஆலோசனை கூறுகின்றது,  1) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட வேண்டும் 2) தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசிக்க வேண்டும்   1) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட வேண்டும் :  பிரியமானவர்களே, நீங்கள் இயேசு கிறிஸ்துவே உங்களுடைய இரட்சகர், ஆண்டவர் என்றும், அவரை நீங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் சேவிப்பீர்கள் என்றும் உங்களுடைய வாயினால் அறிக்கை பண்ண வேண்டும். அல்லேலூயா !  2) தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விச...