Posts

Showing posts from August, 2020

கர்த்தருடைய கிருபை

அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா (சங் 117 :2 ) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் நம்மேல் வைத்திருக்கிற கிருபை பெரியதாகவும், அவருடைய உண்மை என்றென்றைக்குமுள்ளதாகவும் இருக்கின்றது. அல்லேலூயா !  ஆகவே பிரியமானவர்களே, சங்கீதக்காரனைப் போல் நாமும் நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரை எப்போதும் அவருடைய கிருபைக்காகவும், அவருடைய இரக்கங்களுக்காகவும், அன்புக்காகவும், அவருடைய தயாவுக்காகவும், அவருடைய உண்மைக்காகவும் துதிக்க வேண்டும், அல்லேலூயா !  பிரியமானவர்களே,  அவ்வாறு தேவனை துதிக்கும் போது நம்முடைய வாழ்க்கை தேவனுடைய பிரசன்னத்தினால் நிரம்பியிருக்கும், அவ்வாறு நம்முடைய வாழ்க்கை தேவ பிரசன்னத்தினால் நிரம்பியிருக்கும் போது வாழ்க்கையில் ஆரோக்கியமும்,  சமாதானமும், நிம்மதியும், சதோஷமும் இருக்கும். அல்லேலூயா !  தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆச

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் (கலா 6:7) அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான் (நீதி 22:8 ) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, சிலர் வாழ்க்கையில் அதிக ஐசுவரியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதட்க்காக அநியாயத்தை செய்து அநீதியான முறையில் பணத்தை சம்பாதித்துக் கொள்ளுகிறார்கள், அது கர்த்தருடைய பார்வையில் பாவமானதாக இருக்கின்றது. அப்படி அவர்கள் சம்பாதித்துக் கொள்ளும் ஐசுவரியமானது அவர்களது வாழ்க்கையில் நிலைத்திருக்காது. பிரியமானவர்களே,  வேதம் சொல்லுகிறது  “மனுஷன் எதை அவனுடைய வாழ்க்கையில் விதைக்கின்றானோ அதையே அறுப்பான்” என்று. அவன் அநியாயத்தை வாழ்க்கையில் விதைத்தால் வருத்தத்தையே அறுப்பான்.  ஆகவே பிரியமானவர்களே, வாழ்க்கையில் நீங்கள் அநீதியை விதைக்கிறதை விட்டு விட்டு  நீதியை விதைத்து வாழ்க்கையில் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் அறுத்துக் கொள்ளுங்கள். அல்லேலூயா !  தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும்

தேவன் நித்தியமானவர்

பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர் (சங் 90:2) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, மனுஷர்களாகிய நாம் நித்யமானவர்களல்ல, அநித்யமானவர்கள், மனுஷர்களாகிய நமக்கு சரீர மரணம் நியமிக்கப்பட்டிருக்கிறது, நாங்கள் ஒருநாள் மரிக்க வேண்டியவர்கள்.  ஆனால் பிரியமானவர்களே, ஆம் ஆராதிக்கின்ற, நம் ஒவ்வொருவரையும் சிருஷ்டித்த நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து நித்தியமானவர், அவர் நித்திய காலமாக இருக்கிறவர், அவர் “பர்வதங்கள் தோன்றுமுன்னும், அவர்  பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், அவர் அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறார், அவரே அல்பாவும், ஓமெக்காவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறார். அல்லேலூயா !  ஆகவே பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் நித்தியகாலமாய் அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிற படியால்  அவரை நாம

தேவனுடைய சித்தத்தின் படியாய் ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்கு செவி கொடுக்கும் தேவன்

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (சங் 66:18-20) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, நம்முடைய இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருப்போமானால் ஆண்டவர் நம்முடைய ஜெபத்துக்கு பதில் கொடுக்க மாட்டார்.  பிரியமானவர்களே, இங்கே சங்கீதக்காரன் சொல்லுகிறார் “ மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக” என்று. அல்லேலூயா !  பிரியமானவர்களே, நாம் தேவனுடைய சமூகத்தில் ஜெபிக்கும் போது நம்முடைய சுய சித்தம் நிறைவேற வேண்டும் என்று நினைத்து, நம்முடைய சுய சித்தத்திற்கு முக்கியத்